சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியர்களின் கனவை காலி செய்த ஆஸ்திரேலியா.. புலம் பெயர்தோர் விவகாரம்.. எடுத்த அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

சிட்னி: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வர விரும்பும் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை 2லட்சத்திற்கு கீழ் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவால் அங்கு குடியேற திட்டமிட்டுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை பாதிக்கும்.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனாவால் உலகப் பொருளாதாரம் "கடுமையான மந்தநிலையை சந்தித்துள்ளது. உலகின் எல்லா நாடுகளின் பொருளாதாரத்தையும் கொரோனா சீரழித்துவிட்டது.

இதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்ககள் வறுமையில் தள்ளப்பபட்டுள்ளனர். சுமார் 1.5 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6லட்சத்திற்கு அதிகமாக மக்கள் பலியாகி உள்ளனர். தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

பொருளாதாரம் பாதிப்பு

பொருளாதாரம் பாதிப்பு

இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டு பொருளாதாரத்தில் கொரோனாவால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொற்று தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் விதிக்கப்பட்ட பயண தடைகள் மற்றும் எல்லை மூடல்களால் கடுமையான நெருக்கடியை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது.

புலம் பெயர்வோருக்கு பாதிப்பு

புலம் பெயர்வோருக்கு பாதிப்பு

இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டு கருவூலத் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில், சர்வதேச பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா விண்ணப்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்களின் திறனில் உள்ள தடைகள் ஆகியவற்றால் நிகர வெளிநாட்டு இடம்பெயர்வு (NOM) கணிசமாக பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 2018-19ல் 232,000 ஆக இந்த நிலையில் 2019-20ல் 154,000 ஆகவும் இருந்தது. இந்நிலையில் 2020-21ல் 31,000 பணிகளை குறைக்க முடிவு செய்துள்ளது. அதாவது 2லட்சத்திற்கும் குறைவான புலம் பெயர்ந்தோரை அனுமதிக்க முடிவு செய்தள்ளது.

இந்தியர்களை பாதிக்கும்

இந்தியர்களை பாதிக்கும்

ஆஸ்திரேலியாவில் 700,000 இந்தியர்கள் வசிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு திறமையான புலம்பெயர்ந்த இந்தியர்கள் அதிக அளவில் சென்று உள்ளார்கள் என்பது இதுவே மிகப்பெரிய உதாரணம். ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சுமார் 90,000 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். ஆஸ்திரேலிய அரசின் முடிவு இந்தியர்களின் ஆஸ்திரேலிய வேலை கனவை கலைத்துவிட்டது. ஓராண்டுக்கு கனவை மறக்க வைத்துவிடும். அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் இந்த முடிவினை எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு இரண்டு வார தனிமைப்படுத்தப்பட்ட காலம் கட்டாயமாக்கப்படும்.

என்ன நிலைமை இப்போது

என்ன நிலைமை இப்போது

கடந்த மார்ச் மாதம் சர்வதேச பயணத் தடைகளை ஆஸ்திரேலியா அமல்படுத்தியது. இது சுற்றுலாப்பயணிகள் வருகை மற்றும் தற்காலிக இடம்பெயர்வு விசாக்களில் வருவதைத் தடுத்ததுடன், ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. பொருளாதார நிபுணர் ஜோஷ் ஃப்ரைடன்பெர்க் கருத்துப்படி, ஆஸ்திரேலியாவின் பயணத் தடை எப்போது நீக்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில், கொரோனா தொற்றால் 13,900 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். 155 பேர் உயிரிழந்தனர்.

English summary
Australia's migration intake will drop significantly to 31,000 in 2020-21, to allow 200,000 less migrants; Indians impacted
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X