சிவகாசி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது எப்படி? சிவகாசியில் ஐவர் குழு தீவிர விசாரணை

Google Oneindia Tamil News

Recommended Video

    எச்.ஐ.வி பரவலை தடுக்கும் அரசே இப்படி அலட்சியமாக இருந்தால் எப்படி?- வீடியோ

    சிவகாசி: சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சிவகாசி ரத்த வங்கி பிரிவில் மருத்துவர் மாதவி தலைமையிலான ஐவர் குழு விசாரணை நடத்தி வருகிறது.

    நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மோசமான சம்பவம் குறித்து, கூடுதல் இயக்குநர் மருத்துவர் மாதவி தலைமையிலான ஐவர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.

    HIV blood: High level medical committee inquired blood bank employees in Sivakasi

    விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள ரத்த வங்கி பிரிவில், இருந்துதான், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு, ரத்தம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுவதால், ரத்த வங்கி பிரிவில், உயர்மட்ட குழு விசாரணை நடத்தியது.

    ரத்த வங்கி பொறுப்பாளர் சைலேஷ்குமார், ஆய்வக நுட்புணர்கள் வளர்மதி, கணஏஷ்பாபு, ரமேஷ் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக விசாரிக்க, தேசிய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.

    எவ்வாறு ரத்தம் பரிசோதிக்கப்படாமல் வாங்கப்பட்டது, செலுத்தப்பட்டது என்பதை கண்டறிய இந்த குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    English summary
    High level medical committee under doctor Madhavi visited Sivakasi government hospital where HIV infected blood has received and transpered to a pregnant women in Sattur government hospital. Team has inquired blood bank employees.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X