சிவகாசி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிவகாசி ஜவுளிக்கடையில் தீ விபத்து - பல லட்சம் ஜவுளிகள் எரிந்து சாம்பல்

Google Oneindia Tamil News

சிவகாசி: சிவகாசியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து சாம்பலானது.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த ஜவுளிக்கடையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

Sivakasi textile shop fire - Millions of textiles burnt to ashes

தீ கொளுந்து விட்டு எரிந்ததால் கடைக்குள் இருந்த ஜவுளிகள் எரிந்து சாம்பலானது. தீ பரவும் முன்னதாகவே ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த ஜவுளிக்கடை அருகே நகைக்கடை அருகே நகைக்கடை, ஜவுளிக்கடைகள் வரிசையாக இருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

English summary
A fire broke out at a popular textile shop in Sivakasi. Millions worth of textiles were burnt to ashes as the fire spread. Preliminary investigations have revealed that the fire occurred due to a leak in a gas cylinder placed at the back of the textile shop near the Sivakasi bus stand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X