For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இயற்கை உபாதையை கழிக்க முடியாத சிறுமி.. அறுவை சிகிச்சைக்கு உதவுங்களேன்

சென்னை: ஜியாயனா அப்ரீன் பிறந்து 3 மணி நேரமான பிறகுதான், அவரால் மலம் கழிக்க முடியவில்லை என்று தந்தை புகாரிக்கும் தாய் நிலுஃபருக்கும் தெரியவந்தது.

பிறந்து, 6 மணி நேரமேயான நிலையில், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜியாயனா. அங்கு 2வது நாளில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாயாரால், குழந்தையுடன் மருத்துவமனை சென்று தங்க முடியவில்லை. 15 நாட்களுக்கு, அந்த குழந்தை எழும்பூர் மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டார்.

Small girl need your financial help

ஒருவழியாக ஜியாயனா சிறுமியானார். ஆனால், எடை கூடியதும், மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். அனிமியா பாதிப்பும் இருக்கும், சிறுமிக்கு இப்போது மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கு ரூ.3,90,000 பணம் தேவைப்படுகிறது. ஆனால், புகாரி குறைந்த சம்பளத்தில், ஆம்பூர் தோல் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். அவரால் இவ்வளவு பணத்தை திரட்ட முடியவில்லை. உங்களால் முடிந்த உதவியை சிறுமியின் சிகிச்சைக்கு அளியுங்களேன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X