"சுத்த சைவம்!" கங்குலி வீட்டிற்கு டின்னருக்கு வந்த அமித் ஷா ! சர்ப்ரைஸ் விசிட்டிற்கு வேறு என்ன காரணம்
கொல்கத்தா: மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி டின்னர் சாப்பிடுவது போன்ற படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான தாதா கங்குலியின் வீடு மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இன்று மாலை சில மணி நேரம் முன்பு, சில வெள்ளை நிற எஸ்யுவி கார்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கங்குலி வீட்டிற்கு வந்துள்ளது.
இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் கங்குலியின் வீட்டின் முன் திரண்டனர். போலீஸ் பாதுகாப்புடன் காரில் வந்து கொண்டிருந்த அமைச்சர் அமித் ஷா கூடியிருந்த மக்களை நோக்கி வணங்கியபடியே சென்றார்.
ஆப்பிரிக்காவில் நூலகம் உருவாக்கும் 2 இந்திய சிறுமிகள்... அமெரிக்காவிலிருந்தபடி அரும்பணி

டின்னர்
கொல்கத்தாவிற்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் வீட்டில் இன்று இரவு உணவு சாப்பிட்டார். யாரும் எதிர்பார்க்காத இந்த நிகழ்வின் போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. மத்திய அமைச்சரின் மகன் ஜெய் ஷா, பிசிசிஐயில் உள்ள நிலையில், கங்குலி வீட்டில் அமித் ஷா உணவு சாப்பிட்டுள்ளார். அரசியல் ரீதியாகவும் இது பல்வேறு யூகங்களைக் கிளப்பி உள்ளன.

என்ன காரணம்
.
இந்நிலையில், இது தொடர்பாக கங்குலியே விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கங்குலி கூறுகையில், "இந்த டின்னர் நிகழ்வில் அரசியல் எதுவும் இல்லை. அமித் ஷாவை எனக்கு 10 ஆண்டுகளாகத் தெரியும். கடந்த காலங்களிலும் நான் அமித் ஷாவை பலமுறை சந்தித்து உள்ளேன். நாங்கள் பேச நிறைய இருக்கிறது. அவரை எனக்கு 2008 முதல் தெரியும். நான் இந்திய அணிக்காக விளையாடும் போதே அவரை சந்தித்து உள்ளேன்.

டின்னர் மெனு
நான் அவருடைய மகனுடன் வேலை செய்கிறேன். எனவே, இந்த சந்திப்பை அப்படி தான் பார்க்க வேண்டும்" என்றார். டின்னர் மெனு என்ன என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குச் சிரித்துக் கொண்டே பதில் அளித்த கங்குலி, "வீட்டிற்குச் சென்று பார்த்தால் தெரியும், அவர் சைவம் மட்டுமே சாப்பிடுவார்" என்று குறிப்பிட்டார்.

முதல்முறை இல்லை
அரசியல் கட்சியில் இணைவது தொடர்பான தகவல்களை கங்குலி மறுப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அவர் அமித் ஷாவை சந்திது இருந்தார். அப்போது மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் கங்குலி போட்டியிடுவார் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அதனை கங்குலி திட்டவட்டமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.