For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

உலக கோப்பை கால்பந்தால் உள்ளூர்வாசிகள் வயிறு நிரம்பப்போகுதாம்...

By Veera Kumar

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் உலக கோப்பையை நடத்தி அந்த நாட்டு அரசு வீண் செலவு செய்துவிட்டது என்று குற்றம்சாட்டி அந்த நாட்டின் ஒரு பிரிவு மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் உலக கோப்பை விளையாட்டால் அந்த நாட்டு மக்கள் வாழ்க்கைத்தரம் உயரப்போவதும், வருமானம் அதிகரிக்கப்போவதும் போகப்போக அவர்கள் புரிந்துகொள்ள உள்ளனர்.

போராட்டங்கள்

போராட்டங்கள்

உலக கோப்பை கால்பந்தாட்டம் மற்றும் அதுதொடர்பான, ஏற்பாடுகளுக்கு பிரேசில் அரசு மானாவாரியாக செலவிட்டதாக கூறி மக்கள் போராட்டங்கள் நடத்தினர். கால்பந்தாட்டம் தொடங்கியதும் பிரேசில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மறந்துவிடுவார்கள் என்று அந்த நாட்டு கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே கூறியிருந்தார்.

பொருளாதார ஆய்வறிக்கை

பொருளாதார ஆய்வறிக்கை

இந்நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று பிரேசில் கால்பந்தாட்டத்தால் கிடைக்கப்போகும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளது. பொருள் மற்றும் சேவை பொருட்கள் உற்பத்தி, 51 பில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்ந்துள்ளதாம்.

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

வேலைவாய்ப்பு அதிகரிப்பு

ஆண்டுதோறும் 3.63 மில்லியன் வேலைவாய்ப்பு கூடிக்கொண்டே போக வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

உலக கோப்பைக்கான செலவு

உலக கோப்பைக்கான செலவு

உலக கோப்பையில் ஏற்பாடுகளில், 2.9 பில்லியன் டாலர் மீடியாக்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. 2.1 பில்லியன் டாலர் ஸ்டேடியங்கள் புதுப்பிக்கவும், 1.4 பில்லியன் டாலர் ஹோட்டல் காம்ப்ளக்ஸ்கள் கட்டவும், 1.2 பில்லியன் டாலர் நகரங்களின் மேம்பாட்டுக்காகவும் செலிவிடப்பட்டுள்ளது.

செலவு இல்லை முதவீடு

செலவு இல்லை முதவீடு

பாதுகாப்புக்காக 763 மில்லியன் டாலர்களும், நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக 648 மில்லியன் டாலர்களும் பிரேசில் முதலீடு செய்துள்ளது. இதை செலவீனமாக பார்க்காமல் முதலீடாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது அந்த ஆய்வறிக்கை.

ரசிகர்கள் பணம்

ரசிகர்கள் பணம்

ஏனெனில் உலக கோப்பையை பார்க்க வந்த ரசிகர்கள், 956 மில்லியன் டாலர்களை தங்குமிடங்களுக்காக செலவிட்டுள்ளனர், 406 மில்லியன் டாலரை சாப்பாட்டுக்காகவும், 374 மில்லியன் டாலரை பொருட்களை ஷாப்பிங் செய்யவும், 238 மில்லியனை போக்குவரத்துக்காகவும் செலவிட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

பிரேசிலுக்கு இதுவரை சராசரியாக ஆண்டுக்கு, 5 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை உயர்ந்து 7.48 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, July 17, 2014, 17:04 [IST]
Other articles published on Jul 17, 2014
English summary
From Suarez biting drama, to Neymar’s injury tragedy, the Brazil 2014 World Cup has seen it all. Now that the results are out, let’s take a look at the economic impact of 2014 FIFA World cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X