For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அப்பாடா ஒருவழியா ஒரு மேட்ச ஜெயிச்சுட்டோம்.. ஆப்கனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

By Veera Kumar

அடிலெய்ட்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இன்று நடைபெற்ற பயிற்சியாட்டத்தில், இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியை 153 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒன்றில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு தினங்கள் முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா மோசமாக தோற்றது. இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தானுடன் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் பயிற்சி ஆட்டம் நடந்தது.

6th Warm-up Match in Adelaide…

உலகக்கோப்பையில் இந்திய அணி, வரும் 15ம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்திய அணி திறமையை மீட்டெடுப்பதற்கு ஆப்கானிஸ்தான் அணியுடனான பயிற்சியாட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் முதல்முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தானின் பந்து வீச்சை கூட விளாச முடியாமல் தடுமாறியது இந்திய அணி.

துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 4 ரன்கள் எடுத்து ஹமீத் ஹசன் பந்து வீச்சில் போல்ட் ஆகி பரிதாபமாக வெளியேறினார். நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோஹ்லி 5 ரன்கள் எடுத்த நிலையில் தவ்லத் ஜர்டான் பந்து வீச்சில், அப்சர் ஜசாயிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை ரெய்னா-ரோகித் ஷர்மா ஜோடி சரிவில் இருந்து மீட்டது.

ரோகித் ஷர்மா 150 ரன்களும், ரெய்னா 75 ரன்களும், ரஹானே 88 ரன்களும் விளாசினர். 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 364 ரன்களை குவித்தது.

இதன்பிறகு ஆப்கன் பேட்டிங்கை தொடர்ந்தது. இந்திய வேகப்பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்ட ஆப்கன் துவக்க வீரர்கள் ஜாவித் அகமதி, உஸ்மான் ஹனி அடித்து ஆடினர். இருப்பினும் உமேஷ் யாதவ் பந்து வீச்சில் டோணியிடம் கேட்ச் கொடுத்து ஜாவீத் 17 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ரவ்ரோஸ் மங்கள் சிறப்பாக ஆடினார். அவர் 85 பந்துகளில் 60 ரன்கள் குவித்து மோகித் ஷர்மா பந்து வீச்சில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். உஸ்மான் ஹனியும் 44 ரன்களில் ஜடேஜா பந்து வீச்சில் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்தார்.

இதன்பிறகு ஆட்டத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அஸ்கர் 20 ரன்களிலும், நஜிபுல்லா ஜர்டான் 4 ரன்களிலும், சாமுல்லா 17 ரன்களிலும் அடுத்தடுத்து நடையை கட்டினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு, 211 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அப்சர் 24 ரன்களுடனும், நாசிர் ஜமால் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றனர். இந்திய பந்து வீச்சாளர்களால் குட்டி அணியான ஆப்கானிஸ்தானின் அனைத்து விக்கெட்டுகளையும் கூட வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆரம்பித்து இந்த போட்டிவரை இந்தியா டெஸ்ட், ஒருநாள் என எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் இருந்தது. அந்த வகையில், ஆஸி. சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.

Story first published: Tuesday, February 10, 2015, 16:55 [IST]
Other articles published on Feb 10, 2015
English summary
6th World Cup warm-up matches between India and Afghanistan at the Adelaide Oval, Adelaide on Tuesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X