பாட்மிண்டன் சாம்பியன் ஸ்ரீகாந்துக்கு பம்பர் பரிசு.. ரூ.50 லட்சத்துடன் குரூப் 1 அதிகாரிக்கான பணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயவாடா: ஆஸ்திரேலியன் ஓபன், இந்தோநேஷியா பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவுக்களுக்கான போட்டிகளில் சாம்பியன் வென்ற கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்து ரூ.50 லட்சம் பரிசுத் தொகையை வழங்கினார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சீன வீரர் யுகி ஷி-யை 21-10 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த் இறுதி போட்டிக்கு 27 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.

சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஸ்ரீகாந்த் தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதி பெற்றார். இதற்கு முன்னதாக கடந்த வாரம் சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசியா ஒபன் இறுதிப் போட்டிகளில் ஸ்ரீகாந்த் விளையாடியிருக்கிறார்.

 அரையிறுதியில் மோதல்

அரையிறுதியில் மோதல்

இதில் இந்தோனேசிய ஓபன் போட்டியில் மட்டும் சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் சென் லாங், கொரியாவின் லீ ஹுயுன் ஆகியோர் அரையிறுதியில் மோதினர். இவர்களில் சென் லாங் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீரர் சென் லாங்கை 22-20, 21-16 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார்.

 குரூப் 1 அதிகாரி பணி

குரூப் 1 அதிகாரி பணி

விஜயவாடாவில் தும்மலபள்ளி கலாசேத்ராவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும், மாநிலத்தில் குரூப் 1 அதிகாரி பணியும் வழங்கப்பட்டது.

 கோச்சுக்கு ரூ.15 லட்சம்

கோச்சுக்கு ரூ.15 லட்சம்

அவரது கோச் கோபிசந்துக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வருக்கு ஸ்ரீகாந்த் பாட்மிண்டன் ராக்கெட்டை பரிசளித்து இருவரும் விழா மேடையிலேயே விளையாடினர்.

 விளையாட்டு பல்கலைக்கழகம்

விளையாட்டு பல்கலைக்கழகம்

வெளிநாட்டு கோச்களிடம் ஸ்ரீகாந்த் பயிற்சி பெற விரும்பினால் அதற்கு தேவையான நிதியுதவியை அரசு அளிக்கும் என்றும், அமராவதியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும்.விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதியில் பாட்மிண்டன் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu has given Rs 50 lakhs to Kidambi Srikanth for winning men's singles titles at the Indonesian Open Super Series Premier and Australian Open Super Series.
Please Wait while comments are loading...