For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்: டி.ஆர்.எஸ் கிடையாது!

By Veera Kumar

நாட்டிங்காம்: இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டித்தொடரில் டிஆர்எஸ் எனப்படும், நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் நடைமுறை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.எஸ். முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இந்திய கிரிக்கெட் வாரியம் எப்போதுமே அதை ஏற்றுக்கொண்டது கிடையாது. அதே நேரம் ஆசஷ் உள்ளிட்ட பல கிரிக்கெட் தொடர்களில் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

BCCI wins: No DRS for India-England Test series

இங்கிலாந்தில் நாளை தொடங்க உள்ள, இந்தியா-இங்கிலாந்து நடுவேயான டெஸ்ட் போட்டித்தொடருக்கும் இதுபோன்ற டிஆர்எஸ் நடைமுறையை பயன்படுத்த வேண்டும் என்பது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது.

இறுதியில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. எனவே இந்த போட்டித்தொடரில் டி.ஆர்.எஸ் நடைமுறை இருக்காது. மைதானத்தில் உள்ள நடுவர்கள் எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது.

இரு நாடுகள் நடுவேயான போட்டி என்பதால்தான் டி.ஆர்.எஸ். நடைமுறை கிடையாது என்றும், ஐசிசி தொடர்களில் அந்த முறை செயல்படுத்தப்படும் என்றும் ஐசிசி தெளிவுபடுத்தியுள்ளது.

டிரென்ட் பிரிட்ஜ்ஜில் நாளை தொடங்க உள்ள இவ்விரு அணிகள் நடுவேயான போட்டிக்கு நடுவர்களாக குமார் தர்மசேனா, புரூஸ் ஆக்சன்போர்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Story first published: Tuesday, July 8, 2014, 13:08 [IST]
Other articles published on Jul 8, 2014
English summary
The Board of Control for Cricket in India (BCCI) has got its way on the controversial Umpire Decision Review System (DRS) for the India-England five-Test series which starts tomorrow here. BCCI, which has never been a fan of DRS, has managed to score over England and Wales Cricket Board (ECB).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X