பெண்களுக்கான உலக பாடி பில்டர் பட்டத்தை தட்டினார் இந்தியாவின் பூமிகா ஷர்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெனிஸ்: பெண்களுக்கான உலக பாடி பில்டர் பட்டத்தை இந்தியாவின் பூமிகா சர்மா கைப்பற்றியுள்ளார். இதன்மூலம் பாடி பில்டர் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பெண்களுக்கான உலக பாடி பில்டர் போட்டி வெனிஸ் நகரில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 50 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் 27வடு இடத்தில் இருந்தார் இந்தியாவின் பூமிகா ஷர்மா. இவர் மற்ற போட்டியாளர்களை காட்டியும் அனைத்து சுற்றுகளிலும் அதிக புள்ளிகளை பெற்றதால் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

நாட்டுக்கே பெருமை

நாட்டுக்கே பெருமை

டெஹ்ராடூனைச் சேர்ந்த பூமிகா ஷர்மா உலக பால் பில்டருக்கான சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவையே பெருமைபட செய்துள்ளார். பூமிகா ஷர்மாவின் தாய் ஹன்சா மன்ரல் ஷர்மா மகளிர் பளுத்தூக்குதல் பயிற்சியாளராக உள்ளார்.

பயிற்சியாளரால்..

பயிற்சியாளரால்..

முதலில் பூமிகா துப்பாக்கி சுடுதல் பிரிவைதான் தேர்வு செய்துள்ளார். ஆனால் எழுச்சியூட்டும் ஒரு பயிற்சியாளரை பார்த்தப்பின் அவர் தனக்கான பாதையாக பாடி பில்டர் பிரிவை தேர்வு செய்துள்ளார்.

ஒத்துக்கொள்ளாத பெற்றோர்

ஒத்துக்கொள்ளாத பெற்றோர்

முதலில் அவரது பெற்றோர் பாடி பில்டர் ஆவதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். பெரும் பாடுபட்டு அவர்களை சம்மதிக்க வைத்து பாடி பில்டிங்குள் நுழைந்தாராம்.

7 மணி நேரம் பயிற்சி

7 மணி நேரம் பயிற்சி

தனது கோச் பூபேந்திர ஷர்மாவின் அறிவுரைப்படி ஒரு நாளைக்கு 7 மணி நேரம் பாடி பில்டிங்க்காக பயிற்சி செய்வாராம் பூமிகா ஷர்மா. நடந்து முடிந்த உலக பாடி பில்டருக்கான அனைத்துப் பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று பூமிகா ஷர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பிரபஞ்ச பாடிபில்டர் போட்டி

பிரபஞ்ச பாடிபில்டர் போட்டி

தற்போது உலக பாடி பில்டருக்கான பட்டத்தை கைப்பற்றியுள்ள பூமிகாவுக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பாடிபில்டருக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bhumika Sharma the 21-Year-Old Who Has Won The Miss World Bodybuilding Title. She gained the most number of points in body posing, individual posing and fall category.
Please Wait while comments are loading...