சோகத்துடன் முடிந்தது போல்ட் சகாப்தம்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

லண்டன்: தடகள மைதானத்தின் முடிசூடா மன்னனாக, பல ஆண்டுகளாக பல நாட்டு வீரர்களுக்கு சிம்மசொப்பனாக இருந்த, ஜமைக்காவைச் சேர்ந்த மின்னல் வீரர் உசேன் போல்ட், தனது கடைசி போட்டயில், காயத்துடன் வெளியேறினார்.

உலக தடகளப் போட்டி, ஒலிம்பிக் போட்டி என்று எந்தப் போட்டியாக இருந்தாலும், உசைன் போல்ட் இருந்தால், வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கத்துக்கு மட்டுமே போட்டி இருக்கும். தங்கம் நிச்சம் போல்ட்டுக்குதான்.

தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள போல்ட், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடந்து வரும், உலக தடகளப் போட்டிதான் கடைசி போட்டி என்று அறிவித்திருந்தார்.

3வது இடமே

3வது இடமே

100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தபோது, சக வீரர்களே அதிர்ச்சி அடைந்தனர். இந்த உலக தடகளப் போட்டியில், தங்கத்துடன் விடைபெறும் கடைசி வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தது.

யாரும் எதிர்பாராத அதிர்ச்சி

யாரும் எதிர்பாராத அதிர்ச்சி

100 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிக்கு, ஐமைக்கா அணியை அவர் இட்டுச் சென்றார். இன்று அதிகாலையில் நடந்த போட்டியில், யாரும் எதிர்பாராத அதிர்ச்சி நடந்தது.

தொடங்கியதும் 3வது இடம்

தொடங்கியதும் 3வது இடம்

ஒரு அணியில் நான்கு பேர் தொடர்ந்து ஓடி, வெற்றி இலக்கை எட்ட வேண்டும். முதல் மூன்று பேர் ஓடியப் பிறகு, நான்காவதாக போல்ட் தயாராக இருந்தார். அவருடைய ஓட்டம் துவங்கியபோது, மூன்றாவது இடத்தில் இருந்தார்.

மைதானத்தில் சுருண்டு விழுந்தார்

மைதானத்தில் சுருண்டு விழுந்தார்

இதெல்லாம் அவருக்கு ரொம்ப சகஜம். தங்கம் வெல்வது நிச்சயம் என்று எதிர்பார்த்த நேரத்தில், எல்லையை தொடுவதற்கு சில மீட்டரே இருந்த நேரத்தில், திடீரென நொண்டத் தொடங்கினார். தட்டுத் தடுமாறி நடக்க முயன்றவர், மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

காலில் தசைப்பிடிப்பு

காலில் தசைப்பிடிப்பு

காலில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் அவரால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால், மைதானத்தில் இருந்த, 60 ஆயிரம் பேர் மற்றும் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில்

கண்ணுக்கு எட்டிய தூரத்தில்

கடைசி போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு கண்ணுக்கு எதிரே இருந்தபோதும், அதை போல்ட் இழந்தது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
world fastest man ussain bolt, missed his last medal in the IAAF championship because of injury
Please Wait while comments are loading...