தங்கத்துடன் விடைபெறுவாரா மின்னல் போல்ட்?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

லண்டன்: உலகின் மிகவும் வேகமாக மனிதரான, மின்னல்’உசேன் போல்ட், ரசிகரா நீங்கள். இன்று நள்ளிரவில், டிவியை பார்க்கத் தவறாதீர்கள். தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ள உசேன் போல்ட், தனது கடைசி போட்டியில் தங்கத்துடன் விடைபெறுவரா என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

எட்டு ஒலிம்பிக் தங்கம் வென்றுள்ள போல்ட், உலக தடகளப் போட்டிகளில், 11 தங்கம் உள்பட, 14 பதக்கங்களை வென்றுள்ளார்.

bolt's last chance for gold

இங்கிலாந்தின் லண்டனில் நடைபெறும் உலக தடகள போட்டிகளில், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினிடம் தங்கத்தை இழந்து, வெண்கலம் வென்றபோது, அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட், உலகின் தலைச் சிறந்த தடகள வீரர் என்பதை, அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்தி காட்லின் நிரூபித்தார்.

தடகளப் போட்டிகளில் இருந்து விடைபெறும் உசேன் போல்ட், தங்கத்துடன் விடைபெறுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டிக்கு, ஜமைக்கா தகுதி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற, தகுதிப் போட்டியில், போல்ட் தலைமையிலான ஜமைக்கா அணி, 37.95 விநாடிகளில் கடந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நீங்கள் ஓவியாவின் படைவீரர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, உலக தடகளப் போட்டியின் பிக் பாஸான போல்ட், கடைசி போட்டியில் பங்கேற்பதை பார்க்கத் தவறாதீர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fastest man in the world Usain Bolt has last chance to win another gold in the World Athletics championships.
Please Wait while comments are loading...