For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உசேன் போல்ட் பயிற்சி

By Staff

டெல்லி: வேகமாக ஓடுவதில் கேப்டன் கூல் டோணி அல்லது உலகின் மின்னல் மனிதர் உசேன் போல்ட் யாரு பெஸ்ட் என்று பட்டிமன்றம் நடந்து வருவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு, மைதானத்தில் எப்படி வேகமாக ஓடி ரன் குவிக்க வேண்டும் என்று உசேன் போல்ட் பயிற்சி அளித்து வருகிறார்.

ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட்தான் இப்போதைக்கு உலகின் அதிகவேக வீரராக உள்ளார். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 8 ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ள போல்ட், சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

Aus players getting bolt training


இந்திய வீரர்களுக்கு, யோ - யோ எனப்படும் வேகமாக ஓடும் பயிற்சி அளித்தே அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ரன் எடுக்க அதி வேகமாக ஓடும் வீரராக, கேப்டன் கூல் டோணி உள்ளார்.

இரண்டு விக்கெட்களுக்கு இடையே உள்ள, 22 யார்டுகள், அதாவது, 20.12 மீட்டர் தூரத்தை வேகமாக கடப்பதில் போல்ட்டைவிட டோணிதான் சூப்பர் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ரன் எடுக்க வேகமாக ஓடுவதற்காக ஆஸ்திரேலிய வீரர்களுக்கு போல்ட் பயிற்சி அளித்து வருகிறார். ஆஷஷ் கோப்பை போட்டிகள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு வீரரையும் தனித்தனியாக கவனித்து, போல்ட் ஆலோசனைகளை அளித்து வருகிறார்.

இனி ஆஸ்திரேலிய வீரர்களை ரன்-அவுட் ஆக்குவது என்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.







Story first published: Tuesday, November 21, 2017, 18:13 [IST]
Other articles published on Nov 21, 2017
English summary
Sprinter Ussain Bolt trains Australian cricket team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X