ஒரு டென்னிஸ் போட்டித்தொடரை கூட நடத்த முடியாத அதிமுக அரசு! 21 வருட பாரம்பரியத்தை இழந்த சென்னை

Posted By:
Subscribe to Oneindia Tamil

புனே: சென்னை ரசிகர்களின் ரத்தத்தில் கலந்துபோன சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது புனேவுக்கு இடம்மாறிப்போயுள்ளது. ஆட்சியாளர்கள் இதில் கூடவா அலட்சியமாக இருப்பார்கள் என்ற கேள்வி விளையாட்டு ரசிகர்களை கொதிக்கச் செய்துள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதலே மதராஸ் என்ற பெயர் அகில உலகத்திலும் புகழ் பெற்றது. அதன் புகழுக்கு புகழ் சேர்த்ததுதான் சென்னை ஓபன் டென்னிஸ். தெற்கு ஆசிய நாட்டில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் இந்தியாவில், அதுவும் சென்னையில் என்பது எவ்வளவு பெரிய பெருமை.

டென்னிஸ் என்பது கிரிக்கெட்டைவிட அதிக நாட்டு மக்களால் ரசிக்கப்படும் விளையாட்டு. எனவே சென்னை ஓபன் டென்னிஸ் மூலம், இந்த நகரம் குறித்த தெளிவு பல்வேறு உலக நாடுகளையும் ஊடுருவியது.

பெருமை

பெருமை

இனிமேல் இதெல்லாம் பழம் பெருமைதான். மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் என்ற பெயரில் புனேவில் அடுத்த ஆண்டு முதல் இந்த போட்டித் தொடர் நடைபெறுகிறது. பெயரை கேட்கவே வித்தியாசமாக உள்ளதல்லவா?

ஜெ. முயற்சி

ஜெ. முயற்சி

இந்த பெருமைக்கும் நமது ஆட்சியாளர்கள்தான் காரணம். இந்த டென்னிஸ் போட்டியை சென்னையில் நடத்த முயற்சிகளை மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தொடர்ந்து இப்போட்டிகள் இங்கு நடைபெறவும் தொடர்ந்து அவர் ஆதரவு அளித்து வந்தார். திமுக ஆட்சியிலும் உதவிகள் தொடர்ந்தன. ஆனால் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில், அந்த டென்னிஸ் தொடரை சென்னையில் நடத்தும் பெருமையை தக்க வைப்பதில் தற்போதைய அவருடைய கட்சி ஆட்சியாளர்கள் தோற்றுவிட்டனர்.

தொழிற்சாலைகள்

தொழிற்சாலைகள்

பல்வேறு தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் இடம் பெயர்ந்து போவதை தடுக்க முடியாத ஆட்சியாளர்கள், இப்போது ஒரு டென்னிஸ் போட்டியை கூட தக்க வைக்க முடியாமல் தோற்றுப்போயுள்ளதை நினைத்து குமுறுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

Women tennis player competes in Wimbledon while pregnant -Oneindia Tamil
நிவர்த்தி செய்திருக்கலாம்

நிவர்த்தி செய்திருக்கலாம்

வருமான பிரச்சினைக்காக இடத்தை மாற்றுவதாக டென்னிஸ் அமைப்பு கூறியுள்ளது. இக்குறைபாட்டை களைய தேவையான நடவடிக்கையை அதற்குரிய அமைச்சகம் எடுக்கவில்லை. தங்கள் வருமானத்தை பெருக்க சம்பளத்தை இரட்டிப்பாக்குவதில் காட்டிய கவனத்தை மக்கள் பிரதிநிதிகள் இதில் காட்டவில்லை. இறுதியில் தமிழகம் தான் பெற்றிருந்த பெருமைகளை ஒவ்வொன்றாக இழக்க ஆரம்பித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India's lone ATP tournament, the Chennai Open, will now be held in Pune next year and would be henceforth called "Maharashtra Open".
Please Wait while comments are loading...