டோணியின் புதிய 100!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil
  தோனியின் புதிய 100 சாதனை!-வீடியோ

  சென்னை: சென்னைவாசியாக மாறியுள்ள கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி, மற்றொரு புதிய சாதனைப் படைத்துள்ளார்.

  சர்வதேச போட்டிகளில், அரை சதம் அடிப்பதில் சதமடித்துள்ளார் தலா டோணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நேற்று, 79 ரன்கள் எடுத்தார் டோணி.

  இது, சர்வதேச போட்டிகளில் டோணியின், 100வது அரைசதம் என்பது அவருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் விசேஷமாகும்.

  13 பேர்தான்

  13 பேர்தான்

  இதுவரை, 13 பேர் மட்டுமே இந்த சாதனையைப் புரிந்துள்ளனர். இந்தியாவில், சச்சின் டெண்டுல்கர், 164 அரை சதங்கள் எடுத்துள்ளார்.

  டிராவிட் - கங்குலி

  டிராவிட் - கங்குலி

  ராகுல் டிராவிட், 146, சவுரவ் கங்குலி, 107 அசை சதங்களை கண்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக, டோணி, 100 அரை சதங்களை அடித்துள்ளார்.

  302 போட்டிகளில்

  302 போட்டிகளில்

  மொத்தம் 302 ஒருதினப் போட்டிகளில், 66வது அரை சதத்தை டோணி நேற்று கடந்தார். இதைத் தவிர, 90 டெஸ்ட்களில், 33 அரை சதங்கள், 78 டி-20 போட்டிகளில் ஒரு அரைசதமும் அடித்துள்ளார்.

  10,000 ரன் அடிக்க வெயிட்டிங்

  10,000 ரன் அடிக்க வெயிட்டிங்

  ஒருதினப் போட்டிகளில், 9737 ரன்கள் எடுத்துள்ள டோணிக்கு, 10 ஆயிரம் ரன்கள் என்ற சாதனைக்கு இன்னும், 263 ரன்கள் மட்டுமே தேவை. இந்தத் தொடரிலேயே அதை அவர் செய்து முடிப்பார் என்று நம்பலாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Indian Cricket team former captain MS dhoni slammed 100th half century

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற