For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆப்கனுக்கு எதிரான போட்டியில் 'கூட்டாளி' சாதனை படைத்த ஆஸ்திரேலியா!

By Veera Kumar

பெர்த்: டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் இணைந்து இன்று குவித்த 260 ரன் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலிய வரலாற்றில் புது சாதனையாகும்.

260-run stand is Australia's biggest partnership in ODIs

ஆப்கனுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்தது ஆஸ்திரேலியா. அணியின் ஸ்கோர் 14 ரன்களாக இருந்தபோது, தொடக்க வீரர் ஆரோன் பின்ச் அவுட் ஆனார். இதையடுத்து தொடக்க வீரர் வார்னருடன், ஸ்மித் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 274 ரன்களாக உயர்ந்தபோதுதான் இந்த ஜோடி பிரிந்தது. வார்னர் 178 ரன்களில் அவுட் ஆனார்.

இந்த ஜோடி இணைந்து குவித்த 260 ரன்கள் என்பது ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்னாகும். முன்னதாக, 2009ல், இங்கிலாந்துக்கு எதிராக செஞ்சுரியனில் பாண்டிங் மற்றும் வாட்சன் இணைந்து எடுத்த 252 ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது.

Story first published: Wednesday, March 4, 2015, 15:04 [IST]
Other articles published on Mar 4, 2015
English summary
David Warner and Steven Smith's 260-run stand was Australia's biggest partnership in ODIs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X