For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மே.தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 105 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சூப்பர் வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

By Mathi

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரஹானேவின் அபார சதத்தால் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.

மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட திட்டமிட்டது.

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் மழை குறுக்கிட்டது. இதனால் நேற்றைய ஆட்டம் 43 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

தொடக்க வீரர்கள் அபாரம்

தொடக்க வீரர்கள் அபாரம்

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரஹானே, தவான், கோஹ்லி ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

ரஹானே சதம்

ரஹானே சதம்

ரஹானே 104 பந்துகளில் 103 ரன்களைக் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள், 2 சிக்சர்களும் அடங்கும். 43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்களைக் குவித்தது. 311 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்து களமிறங்கியது.

205 ரன்கள்தான்..

205 ரன்கள்தான்..

மேற்கிந்திய தீவுகள் அணியைப் பொறுத்தவரையில் ஹோப் 81 ரன்களை எடுத்தார். இருந்தபோதும் 43 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களே எடுக்க முடிந்தது.

105 ரன்களில் வெற்றி

105 ரன்களில் வெற்றி

இதனால் இந்திய அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இந்திய அணியின் புவனேஷ்குமார் 5 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை அள்ளினார்.

குவல்தீப்

குவல்தீப்

அதேபோல் குவல்தீப் யாதவ் 9 ஓவர்கள் வீசி 50 ரன்களைக் கொண்டு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

Story first published: Monday, June 26, 2017, 7:43 [IST]
Other articles published on Jun 26, 2017
English summary
India thrashed West Indies by massive 105 runs to win the second One-Day International (ODI) match and went 1-0 up in the 5-match series, on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X