மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் மைதானத்தில் மோடி அரசு மானத்தை வாங்கிய தமிழ் ரசிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

போர்ட்ஆப் ஸ்பெயின்: இந்தியா-மேற்கிந்திய தீவுகள் நடுவேயான கிரிக்கெட் போட்டியின்போது மாட்டிறைச்சி பிரச்சினையை கையில் எடுத்துள்ளார் தமிழ் ரசிகர்.

சாம்பியன்ஸ் டிாராபி தொடரின்போது, இந்தியா-வங்கதேசம் நடுவேயான அரையிறுதி கிரிக்கெட் போட்டியில், மைதானத்தில் அமர்ந்தபடி, மாட்டிறைச்சி தடை தொடர்பாக மோடிக்கு எதிரான பதாகையை தூக்கிப் பிடித்திருந்தார் கேரளாவை சேர்ந்த ரசிகர் ஒருவர்.

இதை அவரது கஸின் சகோதரர் டிவிட்டரில் ஷேர் செய்திருந்தார்.

போ மோனே மோடி

போ மோனே மோடி

'போ மோனே மோடி' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தார் அந்த ரசிகர். மாட்டிறைச்சி தடையை தொடர்ந்து, போ மோனே மோடி என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு தேசிய அளவில் சமூக வலைத்தளங்களில் மலையாளிகள் டிரெண்ட் செய்திருந்தனர்.

டிரெண்ட்

டிரெண்ட்

மலையாளிகள் ஹேஷ்டேக்கை மையமாக வைத்து, அதை நினைவுபடுத்தும் வகையில் இந்த பதாகையை அந்த ரசிகர் வைத்திருந்தார். போட்டோவுக்கும் போஸ் கொடுத்தார்.

மாட்டிறைச்சி சாப்பிடுவோம்

மாட்டிறைச்சி சாப்பிடுவோம்

இந்த நிலையில், நேற்று போர்ட்ஆப்ஸ்பெயினில் நடைபெற்ற இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் நடுவேயான 2வது ஒருநாள் போட்டியை காண வந்த தமிழ் ரசிகர்கள் ஒருவர் we eat beef என்று எழுதிய பதாகையை தூக்கிப்பிடித்து காண்பித்தார். மேலும் அதன் அருகே Tamilan எனவும் எழுதியிருந்தார். இங்கிலாந்தில் மலையாளி செய்த விஷயத்தை அதைவிட தூர தேசமான மே.இ.தீவுகளில் தமிழ் ரசிகர் ஒருவர் செய்துள்ளார்.

தர்ம சங்கடம்

தர்ம சங்கடம்

இருவருமே மோடி அரசின் மாட்டிறைச்சி தடை உத்தரவுக்கு எதிராகத்தான் இந்த கருத்துக்களை தாங்கி பதாகைகளை தூக்கிப்பிடித்துள்ளனர். கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்களில் எல்லாம் இவ்வாறு மாட்டிறைச்சி பிரச்சினை கிளப்பபடுவது அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A spectator in the ground in Windies has the placard stating "We eat beef- Tamilan"
Please Wait while comments are loading...