இந்த விஷயத்தில் நான் பாகிஸ்தான் கேப்டன் பக்கம்.. ஷேவாக் அதிரடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆங்கிலம் தெரியாது என்பதற்காக பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை விமர்சிப்பதை ஏற்க முடியாது. இறுதிப் போட்டி வரை பாகிஸ்தான் அணியை கொண்டு வந்ததற்காக அவரைப் பாராட்ட வேண்டும் என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் கூறியுள்ளார்.

ஷேவாக் மட்டுமல்லாமல் ஏராளமான இந்திய ரசிகர்களும் கூட சர்பிராஸுக்கு ஆதரவு தெரிவித்து டிவிட்டரில் செய்திகளக் குவித்து வருகின்றனர்.

இந்தியர்களின் இந்த செயல் பாகிஸ்தானியர்களை நெகிழ வைத்து விட்டது. சர்பிராஸுக்கு ஆங்கிலம் தெரியாதது அவரது குறையல்ல. அவரது விளையாட்டை மட்டும் பாருங்கள் என்ற குரலும் ஓங்கி ஒலித்து வருகிறது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

நாளை பாகிஸ்தானை சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா சந்திக்கவுள்ள நிலையில் இந்தியர்களிடையே பாகிஸ்தான் கேப்டனுக்கு திடீர் ஆதரவு கிளம்பியிருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

கேலி கிண்டல்

கேலி கிண்டல்

சர்பிராஸ் அகமதுக்கு சரியாக ஆங்கிலம் பேச வராது என்பதை வைத்து சமூக வலைதளங்களில் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

ஆதரவாக கிளம்பிய இந்தியர்கள்

ஆதரவாக கிளம்பிய இந்தியர்கள்

இந்த செயலுக்கு இந்தியர்களிடமிருந்துதான் முதலில் எதிர்ப்பு வந்தது. சர்பிராஸ் அகமதுக்கு ஆதரவாக அவர்கள் மெசேஜ் போட ஆரம்பித்தனர். இதைப் பார்த்து நெகிழ்ந்த பாகிஸ்தானியர்களும் சர்பிராஸுக்கு ஆதரவாக கிளம்பினர்.

ஷேவாக்கும் ஆதரவு

தற்போது ஷேவாக்கும் சர்பிராஸுக்கு ஆதரவாக டிவீட் போட்டுள்ளார். சர்பிராஸ் ஆங்கிலத்தில் பேசுவதில்லை என்பதற்காக அவரை கிண்டலடிப்பது தவறானதாகும். அவரது வேலை விளையாட்டு. அதை அவர் சரியாக செய்கிறார். பாகிஸ்தானை இறுதிப் போட்டி வரை கொண்டு வந்திருக்கிறார். அடிமை மனோபாவத்திலிருந்து வெளியே வாங்கப்பா என்று தலையில் கொட்டியுள்ளார் ஷேவாக்.

செம பிளேயர்

செம பிளேயர்

சொத்தை அணியான பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற சர்பிராஸ்தான் முக்கியக் காரணம் என்பதில் சந்தேகமில்லை. நாளை இந்தியாவை இறுதிப்போட்டியில் சந்திக்கிறது பாகிஸ்தான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ahead of the grand final of the ICC Champions Trophy 2017, former Indian batsman Virender Sehwag has come out in support of Pakistani captain Sarfraz Ahmed.
Please Wait while comments are loading...