புதிய ஹேர் ஸ்டைலில் கலக்கும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கால்பந்து நட்சத்திரங்கள் சீசனுக்கு ஏற்ப தங்களது ஹேர் ஸ்டைலை மாற்றுவது வழக்கம். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதேபோல் கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோணி ஆரம்பத்தில் அப்துல் கலாமின் ஜெராக்ஸ் போல காணப்பட்டார் டோணி. ஆனால் அப்துல் கலாமை விட சற்றே நீளமான முடியுடன் .. ப்ரீஸி தலையுடன் விக்கெட் கீப்பராக வெளுத்துக் கட்டி வந்தார்.

All rounder Hardik Pandya gets a funky haircut

திடீரென அவரைத் தூக்கி கேப்டன் பதவியில் அமர்த்தியதும் தனது நீளமான சடை முடியை கட் செய்து சம்மர் கட்டுக்கு மாறினார். திடீரென ஒரு ஸ்பைக் வைத்து சில்லிப்பு காட்டினார். ஆனால் இது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. டக்கென்று ஸ்பைக்கை ஒரு நாள் கட் செய்து விட்டார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்ததும் தடாலடியாக மொட்டை போட்டுக் கொண்டார்.

All Rounder Hardik Pandya Gets a Funky Hair Cut-Oneindia Tamil

இப்படி பல கெட்டப்புகளில் வலம் வந்த டோணியைப் போல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அடிக்கடி ஹேர் ஸ்டைல் மாற்றுவதுண்டு. தற்போது இலங்கை தொடருக்கு ஹர்திக் பாண்டியா தயாராகிக் கொண்டிருக்கிறார். பிரபலமானவர்களுக்கு முடி அலங்காரம் செய்யும் ஹகிம் ஆலிமிடம் சென்று புது ஹேர் ஸ்டைல் வைத்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

அந்த படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஹர்திக் பாண்டியா, ''ஆலிம் ஹகிம் நீங்கள் உண்மையிலேயே வித்தைக்காரர் என்று நான் சொல்வேன்... நான் அதை விரும்புகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All rounder Hardik Pandya gets a funky haircut ahead of India tour of Sri Lanka. Rohit Sharma and Ajinkya Rahane also visited Haki Alim for makeover.
Please Wait while comments are loading...