உணர்ச்சிவசப்பட்ட ரசிகர், ஓடிவந்தார் கோஹ்லியை நோக்கி... கான்பூரில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
உணர்ச்சிவசப்பட்ட ரசிகர், ஓடி வந்தார் கோஹ்லியை நோக்கி...வீடியோ

கான்பூர்: கான்பூர் மைதானத்தில் நடந்த இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி.

இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தனர். கோஹ்லி 147 ரன்களும், ரோஹித் சர்மா 147 ரன்களும் அடித்தனர்.

இந்த போட்டியில் கோஹ்லி செஞ்சுரி அடித்த போது அவரது ரசிகர் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு கோஹ்லியை நோக்கி வேகமாக ஓடி வந்தார். இந்த சம்பவம் மைதானத்தில் சில நிமிடங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

 இந்திய அணி தொடர் வெற்றி

இந்திய அணி தொடர் வெற்றி

கடந்த ஒருவாரமாக நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது. மும்பையில் நடத்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியும், புனேயில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது. தற்போது நேற்று கான்பூரில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி இருக்கிறது.

 கோஹ்லி அடித்த செஞ்சுரி

கோஹ்லி அடித்த செஞ்சுரி

இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் மிகவும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தனர். கோஹ்லி 113 ரன்களும், ரோஹித் சர்மா 147 ரன்களும் அடித்தனர். கோஹ்லிக்கு இது சர்வதேச ஒருநாளை போட்டியில் 32 வது செஞ்சுரி ஆகும். மேலும் இந்த ஒரு வருடத்தில் மட்டும் இது இவரது 6 வது ஒருநாள் போட்டியின் செஞ்சுரி ஆகும். மேலும் இதன்முலம் இவர் அதிவேகமாக 9000 ரன்கள் எடுத்தவர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

 கட்டி பிடிக்க வந்த ரசிகர்

கட்டி பிடிக்க வந்த ரசிகர்

நியூசிலாந்து அணி 44வது ஓவர் வீசிக்கொண்டு இருந்தது. நியூசிலாந்து அணியின் மிட்சல் சாண்டர் வீசிய அந்த ஓவரில் 99 ரன்களுடன் களத்தில் இருந்தார் கோஹ்லி. அப்போது சரியாக ஒரு ரன் எடுத்துவிட்டு தன்னுடைய 32 வது செஞ்சுரியை வெற்றிகரமாக எட்டிப்பிடித்தார். இவர் செஞ்சுரி அடித்தவுடன் அரங்கம் மொத்தமும் ஆர்ப்பரிக்க தொடங்கியது. ரசிகர்கள் ஆர்பரிப்பில் உத்திரபிரதேசத்தின் தாஜ்மஹால் இரண்டாவது முறையாக லேசா ஆடிப்போனது என்று கூட சொல்லலாம். அப்போது கோஹ்லியின் ரசிகர் ஒருவர் உணர்ச்சி தாங்காமல் அவரை நோக்கி ஓடி வர தொடங்கினார். மேலும் அவர் கோஹ்லியை கட்டிபிடிக்கவும் முயன்றார்.

 கோஹ்லி ரசிகர் கைது

கோஹ்லி ரசிகர் கைது

இவர் வேகமாக வருவதை பார்த்த காவல் அதிகாரிகள் அவரை துரத்திக் கொண்டு வந்தனர். அவரை லாவகமாக லெக் அம்பயர் இருக்கும் இடத்திற்கு அருகில் வளைத்து பிடித்தனர். அவர் கோஹ்லி பெயரும், அவரின் 18 என்ற எண்ணும் இருந்து ஜெர்ஸியை அணிந்து இருந்தார். விசாரணையின் போது அவர் சந்தோசம் தாங்காமல் கோஹ்லியை கட்டிப்பிடிக்க வந்ததாக கூறினார். கிரிக்கெட் விதிகளின் படி ரசிகர் ஒருவர் இப்படி உள்ளே நுழைவது குற்றம் என்பதால் அவரை கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An ardent fan of Kohli could not control his emotions and caused a serious security breach in Kanpur cricket ground yesterday. when he ran into the ground to hug Virat Kohli on his 32nd ODI century.
Please Wait while comments are loading...