மே.இ.தீவுகள் தொடருக்கு அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார்.. பிசிசிஐ உறுதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மே.இ.தீவுகள் சுற்றுப்பயணம் முடியும் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.

அனில் கும்ப்ளே பதவிக்காலம் இந்த மாதம் முடியவடைய உள்ள நிலையில், புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு கும்ப்ளேவும் கூட விண்ணப்பித்திருந்தார்.

சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோரை கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்முக தேர்வு நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், கும்ப்ளே பதவிக்காலத்தை நீடிக்கச்செய்ய இந்திய கிரிக்கெட் நிர்வாக கமிட்டி முடிவு செய்துள்ளது.

மே.இ.தீவுகள் தொடருக்கும் அவரே இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஜூன் 23-ம் தேதி முதல் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக மே.இ.தீவுகள் செல்கிறது. ஜூலை 9-ம் தேதி ஒரேயொரு டி20 போட்டி பங்கேற்க உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Board of Control for Cricket in India (BCCI) today (June 15) confirmed that Anil Kumble will continue as the team's head coach on the tour of West Indies.
Please Wait while comments are loading...