For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி சாதனையை முறியடிக்கும் முன் கபில் சாதனையை சமன் செய்த கோஹ்லி!

By Staff

கொல்கத்தா: கேப்டனாக அதிக டெஸ்ட்களில் வெற்றி என்ற சாதனைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முன்னாள் கேப்டன் கபில் தேவின் சாதனையை விராட் கோஹ்லி சமன் செய்துள்ளார்.

மூன்று டெஸ்ட்கள், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகளில் விளையாட, இலங்கை கிரிக்கெட் அணி வந்துள்ளது. இதில் டெஸ்ட் போட்டித் தொடர், கோல்கத்தாவில் நேற்று துவங்கியது.

Another record for Virat


மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா முதல் நாள் இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல், முதல் பந்தில் டக் அவுட்டாகி புதிய சாதனைப் படைத்தார். முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், வி.வி.எஸ். லக்ஷ்மன், டபுள்யூ.வி ராமன், சுதிர் நாயக், சிவசுந்தர் தாஸ், வாசிம் ஜாபர், போன்றோர் டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் அவுட் ஆகியுள்ளனர். அந்தப் பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.

அடுத்ததாக விளையாட வந்த கேப்டன் விராட் கோஹ்லி, 11 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டானார். இதன் மூலம், கேப்டனாக ஒரு ஆண்டில் அதிக முறை டக் அவுட்டான கபில்தேவின், 1983ம் ஆண்டு சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார். இந்த ஆண்டில், 5வது முறையாக அவர் டக் அவுட்டாகியுள்ளார்.

டி-20 போட்டிகளில் அதிக போட்டிகளுக்குப் பிறகு டக் அவுட் என்ற சாதனையை, இந்தாண்டு அக்டோபரில் கோஹ்லி புரிந்தார். 47 டி-20 போட்டிகளுக்குப் பிறகு அவர் டக் அவுட்டாகி இருந்தார்.

சவுரவ் கங்குலி கேப்டனாக 49 போட்டிகளில், 21 வெற்றிகளைப் பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றால், கங்குலியின் சாதனையை கோஹ்லி முறியடிக்க முடியும். கோஹ்லி கேப்டனாக இதுவரை 29 போட்டிகளில், 19ல் வென்றுள்ளார். இரண்டு போட்டிகளில் வென்றாலும், கங்குலியின் சாதனையை சமன் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், கேப்டனாக அதிக டக் என்ற விருப்பமில்லாத சாதனையை கோஹ்லி சமன் செய்துள்ளார்.



Story first published: Friday, November 17, 2017, 18:45 [IST]
Other articles published on Nov 17, 2017
English summary
Indian captain Virat Kholi equals Kapil’s record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X