என்ன பாஸ் இப்படி ஆயிருச்சே... பாண்ட்யா, அஸ்வின் பந்துகளை பிரித்தெடுத்த வங்கதேசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிர்மிங்காம்: வங்கதேசத்தை சாதாரணமாக நினைத்தது தப்பாகப் போய் விட்டது. அஸ்வின் மற்றும் ஹர்டிக் பாண்ட்யாவின் பந்துகளை வங்கதேச வீரர்கள் பிரித்து மேய்ந்து விட்டனர்.

பிர்மிங்காவில் இன்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் சந்தித்தன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. தேர்வு சரிதான் என்பது போலத்தான் இந்தியாவின் பந்து வீச்சு ஆரம்பத்தில் இருந்தது.

Ashwin and Pandya fail to impress against Bangladesh

வேகமாக 2 விக்கெட்டுகளை புவனேஸ் குமார் எடுத்தார். ஆனால் அதன் பிறகுதான் வங்கதேசம் தனது வான வேடிக்கையைத் தொடங்கியது. தமிம் இக்பாலும், முஷ்பிகுர் ரஹீமும் சேர்ந்து இந்தியப் பந்து வீச்சை பதம் பார்த்து விட்டனர். குறிப்பாக தமிம் இக்பால் வெளுத்து விட்டார்.

இருவரும் இணைந்து பாண்ட்யா மற்றும் அஸ்வினை பதம் பார்த்தனர். இருவரது பந்துகளையும் விடாமல் வெளுத்தனர். இதனால் வங்கதேச அணியின் ஸ்கோர் வலுவான நிலைக்குப் போய் விட்டது. இக்பாலை கேதார் ஜாதவ் வந்துதான் வெளியேற்றினார். 70 ரன்களுடன் வெளியேறினார் இக்பால்.

மறுபக்கம் தொடர்ந்து ரஹ்மான் ஆடி 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இக்பால் அவுட்டாகிச் செல்லும் வரை அஸ்வின் 7 ஓவர்களுக்கு 42 ரன்களும், பாண்ட்யா வெறும் 3 ஓவர்களை வீசி 28 ரன்களையும் வாரிக் கொடுத்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Both R Ashwin and Hardik Pandya were beaten severely by the Bangladesh top order batting.
Please Wait while comments are loading...