புது கோச்?.. "மூச்".. தெறித்து ஓடிய அஸ்வின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து கருத்து தெரிவிக்க சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மறுத்து விட்டார்.

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அஏவர் பதிலளிக்கையில், இதுகுறித்தெல்லாம் நான் பேசக் கூடாது. அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறி விட்டார் அஸ்வின்.

பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அஸ்வின் வந்திருந்தார். அப்போதுதான் அவரிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்டது.

அதைப் பத்தி மட்டும் கேட்காதீங்க

அதைப் பத்தி மட்டும் கேட்காதீங்க

செய்தியாளர்கள் ரவி சாஸ்திரி குறித்துக் கேட்டபோது, புதிய கோச் பற்றியோ, பயிற்சியாளர்கள் குறித்தோ நான் கருத்து கூற முடியாது. கூறக் கூடாது. அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை.

அது பற்றி பேச முடியாது

அது பற்றி பேச முடியாது

அதுகுறித்து நான் பேசவும் கூடாது. அதுகுறித்து பேசும் அளவுக்கு என்னிடம் விவரம் இல்லை. எனவே அதுகுறித்து கேட்காதீர்கள். பதில் இல்லை என்னிடம் என்றார் அஸ்வின்.

300க்கு 25 பாக்கி

300க்கு 25 பாக்கி

அஸ்வின் தற்போது டெஸ்ட் போட்டிகளில் 275 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 300 விக்கெட் வீழ்த்த அவருக்கு இன்னும் 25 விக்கெட்தான் பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது. அதை வருகிற இலங்கை டூரில் அஸ்வின் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ashwin's wonderful bowling took India to semi-finals-Oneindia Tamil
இலங்கை தொடர்

இலங்கை தொடர்

இலங்கையில் இந்தியா, 3 டெஸ்ட், ஐந்து ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி 20 போட்டியில் விளையாடவுள்ளது. ஜூலை 21ம் தேதி இந்த பயணம் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி 26ம் தேதி நடைபெறும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian spinner R Ashwin, was reluctant to comment on the appointment of new head coach Ravi Shastri who has replaced Anil Kumble. "I think, the new coach or the new support staff, it does not come under my jurisdiction, it is not something I will take a call on."I am not being diplomatic, it will be unfair for me to pass a comment on that. Likewise always, the Indian team moves on, India moves on (and) we have to find out in course of time, how it is going," said Ashwin, who is 25 short of reaching the milestone of 300 Test wickets.
Please Wait while comments are loading...