For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்திடம் போராடும் பரிதாபம்.. எப்பேர்பட்ட ஆஸி. கிரிக்கெட் அணி நிலைமையை பார்த்தீங்களா?

By Veera Kumar

டாக்கா : உலகின் மிகப்பெரும் அணிகளையும் தங்கள் பேட்டிங், பந்து வீச்சு மற்றும் ஃபீல்டிங்கால் ஆளுமை செய்து வந்த ஆஸ்திரேலியா, இப்போது குட்டி அணியான வங்கதேசத்துடன், அதுவும், டெஸ்ட் போட்டியில் திணறி வருகிறது.

ஆஸ்திரேலியா அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 78.5 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்தது. முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்களை எடுத்தது.

பேட்டிங் சிறப்பு

பேட்டிங் சிறப்பு

வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 84 ரன்களை விளாசினார். தமீம் இக்பால் 71 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ், நாதன் லியோன் மற்றும் ஆஷ்டன் அகர் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆஸி. குறைந்த ரன்கள்

ஆஸி. குறைந்த ரன்கள்

இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதலிலேயே தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 18 ரன்களை எடுத்து இருந்தது. இன்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி 74.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்தது.

அரை சதம் இல்லை

அரை சதம் இல்லை

ஆஸ்திரேலியா அணி சார்பில் மாட் ரென்ஷா அதிகபட்சமாக 45 ரன்களையும், ஆஷ்டன் அகர் 41 ரங்களையும் எடுத்தனர். வங்கதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மெஹீடி ஹசன் 3விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் 43 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியது வங்கதேசம்.

வங்கதேசம் ஆதிக்கம்

வங்கதேசம் ஆதிக்கம்

இரண்டாவது இன்னிசை தொடங்கிய வங்கதேச அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 22 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 45ரன்களை எடுத்துள்ளது. ஆக மொத்தம் வங்கதேச அணி 88 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 3நாள் ஆட்டம் எஞ்சியுள்ளது. வங்கதேச கை ஓங்கியுள்ள நிலையில், ஆஸி.க்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

Story first published: Monday, August 28, 2017, 17:56 [IST]
Other articles published on Aug 28, 2017
English summary
Australia is staring down the barrel of one of its greatest ever Test cricket embarrassments, after another batting shambles put Bangladesh in the box seat to create history.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X