ஆஸி.க்கு எதிரான போட்டி லேசுப்பட்டது கிடையாது.. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி எப்போதுமே முக்கியமானது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப் பரிட்சை நடத்த உள்ளன. இரு நாடுகளுமே, இந்தியா-பாகிஸ்தான் போல கிரிக்கெட்டின் பரம வைரிகள் என்பதால் ரசிகர்களிடம் பெரும் ஆர்வம் நிலவுகிறது.

இதனிடையே மோர்கன் கூறுகையில், ஆஸ்திரேலியா சிறந்த அணி என்பதால் இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆஸி.க்கு எதிராக எப்போதுமே கொஞ்சம் கூடுதல் திறமையை காட்ட வேண்டிவரும். அதை செய்வோம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவது இந்த தொடரில் தொடர் வெற்றிக்கு உத்வேகம் தரும். இவ்வாறு மோர்கன் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
England ODI captain Eoin Morgan admitted that games against Australia 'always have something more on them' ahead of the side's ICC Champions trophy group game.
Please Wait while comments are loading...