மகளிர் உலக கோப்பையை 30 ஓவராக குறைப்பதா? வக்காரை வறுத்தெடுக்கும் வீராங்கனைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை கோச்சான வக்கார் யூனிஸ் ஐசிசி-க்கு தெரிவித்த யோசனைக்கு பெண்கள் கிரிக்கெட் அணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 நாடுகள் மோதி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு டுவிட்டர் மூலம் ஒரு ஐடியா கொடுத்துள்ளார்.

அவரது டுவிட்டரில், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 50 ஓவர் கொண்டதாக நடத்தப்படுவதை 30 ஓவராக குறைக்க வேண்டும். டென்னிஸில் வீராங்கனைகளுக்கு 5 செட்டுகளுக்கு பதிலாக 3 செட் கொண்டதாக நடத்தப்படுவதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

சுவாரஸ்யம் உருவாகும்

50 ஓவர் என்பது கொஞ்சம் அதிகமே. ஓவர்களை குறைப்பதன் மூலம் ஆட்டத்தில் கடும் சவாலும், சுவாரஸ்யமும் உருவாகும். ரசிகர்களையும் அதிகமாக கவர முடியும். அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் நோக்கில் இதை சொல்லவில்லை என்று குறிப்பிட்டார்.

கடும் எதிர்ப்பு

வக்கார் யூனிஸின் இந்த கருத்து பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் கடும் புயலை கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியுமான அலிசா ஹீலே கூறுகையில், பெண்கள் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான ஆட்டத்தில் மொத்தம் 530 ரன்கள் குவித்தது, ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 7 பேர் சதம்

7 பேர் சதம்

மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸ் ஜோனாசென் கூறுகையில்,‘ இந்த உலக கோப்பையில் முதல் வாரத்தில் வீராங்கனைகளின் திறமை வியப்புக்குரிய வகையில் வெளிப்பட்டு இருக்கிறது. 7 பேர் சதம் அடித்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணி இலக்கை விரட்டிப்பிடித்ததில் சாதனை படைத்தது.

வக்காரின் கருத்தை புறந்தள்ளுங்கள்

ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகளுக்கு 377 ரன்கள் குவித்தது. இவை எல்லாம் பெண்கள் கிரிக்கெட்டில் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் அதிகரித்து வருகிறது என்பதற்கு சான்று. வக்கார் யூனிஸ் சொல்வது போல் 30 ஓவராக குறைத்தால் அதன் பிறகு ஒரு நாள் போட்டிக்கும் 20 ஓவர் போட்டிக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? தவறாக வழிகாட்டும் வக்கார் யூனிசின் கருத்தை புறந்தள்ளி விட வேண்டும்' என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Australia's female cricketers have hit back at Waqar Younis's suggestion that 50-over matches are too long for the women's game, with all-rounder Jess Jonassen labelling the remarks "offensive" and "misguided".
Please Wait while comments are loading...