பாகிஸ்தானிடம் போய் தோத்துருச்சே இந்தியா... ஓடும் ரயில் முன்குதித்து வங்கதேச ரசிகர் தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டாக்கா: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி அடைந்ததை தாங்க முடியாத துக்கத்தில் வங்கதேச நாட்டு ரசிகர் ஒருவர் ஓடும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரை இறுதியில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் பங்கேற்றன. இந்த 4 நாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.

இந்தியாவை ஆண்ட நாடு இங்கிலாந்து. இதுதான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை உருவாக்கியது. பின்னர் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை இந்தியா உருவாக்கியது. பின்னர் இறுதிப் போட்டியில் பரமவைரிகளான இந்தியாவும் போகிஸ்தானும் மோதின.

யுத்தமே நடத்திய பாக்.

யுத்தமே நடத்திய பாக்.

இந்தியாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதைப் போலவே பாகிஸ்தான் வீரர்கள் வெறித்தனமாக விளையாடினர். அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் அந்த ஆக்ரோஷத்தை காண முடிந்தது.

ஜீரணிக்க முடியாத தோல்வி

ஜீரணிக்க முடியாத தோல்வி

ஆனால் கடைசியில் பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவி அதிர்ச்சி வைத்தியம் தந்தது. இந்தியாவின் தோல்வியை ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் நாடு முழுவதும் இந்திய அணி வீரர்களுக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். பல இடங்களில் கோஹ்லி, டோணி கொடும்பாவிகளும் கூட எரிக்கப்பட்டுள்ளன.

வங்கதேச ரசிகர் தற்கொலை

வங்கதேச ரசிகர் தற்கொலை

இந்தியாவின் தோல்வியை நமது நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல பிற நாட்டு ரசிகர்களும் கூட ஜீரணிக்க முடியவில்லை. வங்கதேசத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் ஓடும் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

ரயில் முன்பாய்ந்து

ரயில் முன்பாய்ந்து

வங்கதேசத்தின் ஜமல்பூர் பகுதியைச் சேர்ந்த பித்யூத் என்கிற 25 வயது இளைஞர் இந்தியா தோற்றதை தாங்க முடியாமல் நேற்று இரவு ஓடும் ரயில் முன்பாய்ந்து மாண்டு போயுள்ளார். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian cricket fan from Jamalpur, Bangladesh has reportedly committed suicide after India's defeat to Pakistan in Champions Trophy.
Please Wait while comments are loading...