முதல் முறையாக பேட் பிடித்த குல்தீப், சாஹல்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

குவஹாத்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று இரவு நடந்த இரண்டாவது டி-20 போட்டியின்போதுதான், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் டி-20 போட்டிகளில் முதல் முறையாக பேட் பிடித்தனர்.

மூன்று டி-20 போட்டித் தொடரில் நேற்று இரவு நடந்த 2-வது போட்டியில் வென்று ஆஸ்திரேலியா தொடரை 1-1 என்று சமன் செய்தது. முதலில் ஆடிய இந்தியா, துவக்க மற்றும் நடுகள ஆட்டக்காரர்களை இழக்க, டெயில்என்டர்ஸ் எனப்படும் கடைசியாக களமிறங்கிய வீரர்களே, அணிக்கு மரியாதையான ஸ்கோரை பெற்றுத் தந்தனர்.

batting chance

இதில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் முதல் முறையாக பேட்டிங் செய்துள்ளனர். அதே நேரத்தில் ஜஸ்பிரீத் பூம்ரா முதல் முறையாக ரன் எடுத்துள்ளார்.

இதுவரை 9 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள யுஸ்வேந்திர சாஹல் முதல் முறையாக களமிறங்கி, ஆட்டமிழக்காமல் 3 ரன்கள் எடுத்தார். இதுவே தற்போதைக்கு அவருடைய அதிகபட்ச ரன்களாகும். குல்தீப் யாதவ் 4 போட்டிகளில் முதல் முறையாக களமிறங்கி 16 ரன்கள் எடுத்தார். இதுதான் அவருடைய அதிகபட்ச ரன்களாகும்.

வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பூம்ரா 27 போட்டிகளில் 5 முறை பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளார். ஆனால், முதல்முறையாக நேற்றுதான் அவர் ரன் எடுத்தார். அவர் 7

ரன்கள் எடுத்தார். இதுவே அவருடைய அதிகபட்ச ரன்னாகும்.

20 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், 5 போட்டிகளில் பேட்டிங் செய்து 16 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய அதிகபட்ச ரன் 9 ஆகும். நேற்றைய போட்டியில் அவர் 1 ரன் எடுத்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian bowlers Kuldeep yadav, Yuzvendra Chahal batted first time
Please Wait while comments are loading...