இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக அஸ்வின் மாஜி கோச் சுனில் சுப்பிரமணியன் நியமனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி நிர்வாக மேலாளராக சுனில் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக பதவி வகித்தவர் ரவி சாஸ்திரி. இப்போது அவர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சுனில் சுப்பிரமணியன் இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 12 பேரிடம் நடைபெற்ற நேர்முக தேர்வுக்கு பிறகு இவர் தேர்வாகியுள்ளார்.

BCCI appoints Sunil Subramanian as Administrative Manager of Team India

சுனில் சுப்பிரமணியன், இந்திய கிரிக்கெட் அணி மேலாளராக ஓராண்டுக்கு பதவிக் காலம் நீடிப்பார். சுனில் சுப்பிரமணியன், சுழற் பந்து வீச்சாளர் அஸ்வினின் இளம் வயது பயிற்சியாளராக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

74 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள சுனில் சுப்பிரமணியன் 285 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர் இவர். இவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சான்று பெற்ற பயிற்சியாளர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BCCI appoints Mr. Sunil Subramanian as Administrative Manager of Team India for a period of 1 year. He is also known as Ashwin's coach.
Please Wait while comments are loading...