இனி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு.. லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த குழு அமைத்தது பிசிசிஐ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : கிரிக்கெட் சீர்திருத்தம் குறித்து நீதிபதி லோதா குழு தெரிவித்த பரிந்துரைகளை செயல்படுத்த பிசிசிஐ குழு அமைக்க முடிவு செய்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழு கிரிக்கெட் சீர்திருத்தம் தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

BCCI to form a committee to ensure Lodha committee recomondations can be implemented

இதை செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பாக கூறிவிட்டது. இந்த நிலையில் லோதா கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்த 6 பேர் கொண்ட சீர்திருத்தகுழு அமைக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ இக்குழுவை அமைத்துள்ளது. இரு வாரங்களில் இக்குழு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கும். சுப்ரீம் கோர்ட் உத்தரவை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த அம்சங்கள் அதில் இருக்கும்.

சீர்திருத்தகுழு 2 நாட்களில் தனது பணியை தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BCCI to form a committee to ensure principal order of SC can be implemented, says acting secretary Amitabh Chaudhary.
Please Wait while comments are loading...