என்னங்க சொல்றீங்க.. இந்தியா பாகிஸ்தான் போட்டியை இப்படியும் பார்க்கிறார்கள் சிலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கிரிக்கெட் என்றால் முன்பு பேட்டிங், பவுலிங், வெற்றி, தோல்வி, டிரா, டைதான் அதிகம் நினைவுக்கு வரும். ஆனால் அந்த நிலைமை மாறி பணம், பெட்டிங், புகழ், சூதாட்டம், பிக்ஸிங் என்பதும் இணைந்து விட்டது.

Betting and money power to overwork on India Pakistan finals

குறிப்பாக மிக மிக பரபரப்பான போட்டிகளின்போது யார் வெற்றி பெறுவார், யார் எத்தனை ரன்கள் அடிப்பார்கள், எத்தனை சிக்ஸர் பறக்கும், எத்தனை விக்கெட்கள் வீழ்த்தப்படும் என்று அக்கு வேறு ஆணி வேறாக பெட்டிங் நடத்துவது வழக்கமாகி விட்டது.

எத்தனையோ பேர் கைதானாலும் கூட இன்னும் கூட இது தொடரத்தான் செய்கிறது. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அதுவும் இறுதிப் போட்டியாக இருக்கும் பட்சத்தில் இதில் விளையாடும் பணத்தைப் பற்றி கற்பனை கூட செய்ய முடியாது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Betting and money power to overwork on India Pakistan finals.
Please Wait while comments are loading...