கிரிக்கெட் போட்டி... வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் இந்திய- பாகிஸ்தான் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு ரசிகர்களும் கொண்டாடியது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை காட்டியது.

சர்வதேச சாம்பியன்ஸ் டிராபி 2017 லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் போட்டியிட்டு விளையாடின.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 338 ரன்களை குவித்தது. அதைத் தொடர்ந்து 339 என்ற மாபெரும் இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. எனினும் 10 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை மட்டுமே குவித்து கோப்பையை இழந்தது இந்தியா.

கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்தியா- பாகிஸ்தான் ரசிகர்கள் இருவரும் சேர்ந்தே வாசிப்பு கருவிகளை வாசித்தும் ஆடி பாடி மகிழ்ந்தும் போட்டியை ரசித்தனர்.

என்னதான் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதால் நமக்கு எதிரி நாடு என்றாலும் விளையாட்டு என்று வரும்போது வேற்றுமையில் ஒற்றுமை போல் இவர்கள் கொண்டாடி வருவது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Video which shows that India and Pakistan fans were celebrating the cricket match in oval stadium goes viral.
Please Wait while comments are loading...