ஓ மை காட்.. டெல்லிக்காரர்கள் பயங்கரமா பார்க்குறாங்க போலயே இந்தியா- வங்கதேச மோதலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - வங்கதேசம் இடையிலான அரை இறுதிப் போட்டியை நாடு முழுவதும் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டுள்ளனர். இதை வீரேந்திர ஷேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ந்துள்ளார்.

தலைநகர் டெல்லி முதல் கன்னியாகுமரி வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அளவே கிடையாது. அதுவும் முக்கியமான போட்டிகளில் இந்தியா விளையாடும்போது ஜெயிச்சிருவோம்டா என்ற கோஷத்துடன் கிரிக்கெட் பார்ப்போர்தான் அதிகம்.

இன்று வங்கதேசத்துடன் இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிப் போட்டியில் சந்தித்தது. விடுவார்களா ரசிகர்கள்.. டிவி பெட்டிகளைச் சுற்றி வளைத்து உட்கார்ந்து பார்த்து ரசிக்கின்றனர்.

டெல்லியிலும் கிரிக்கெட் போட்டியை பெரும் ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இதனால் வழக்கமாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் அங்கு இல்லையாம். இதை வீரேந்திர ஷேவாக் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டோவுடன் ஷேர் செய்துள்ளார்.

என்னதான் பெட்டிங், பிக்ஸிங் என்று வந்தாலும் கூட இந்தியா பவுலிங், பேட்டிங், பீல்டிங் என்று வந்து விட்டால் ரசிகர்கள எல்லாவற்றையும் மறந்து ரசிக்கத்தான் செய்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
C Delhi witnesses traffic halt to see Ind -Bangladesh semi finals
Please Wait while comments are loading...