For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா Vs இங்கிலாந்து.. இதுதான் கோஹ்லியின் விருப்பமும் கூட!

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து மோத வேண்டும் என்று எல்லோரும் விரும்புவதாக கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

அரை இறுதி எப்படி இருக்குமோ, ஆனால் இந்த இரு அணிகள் மோதினால் நன்றாக இருக்கும் என்பதுதான் பலருடைய. விருப்பமாகும் என்றும் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார். அவரும் கூட இங்கிலாந்தையே விரும்புவதாக இதன் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் முதல் அரை இறுதிப் போட்டியில் இன்று இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன. நாளை இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

அது மேட்டர் இல்லை பாஸ்

அது மேட்டர் இல்லை பாஸ்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கோஹ்லி பேசுகையில் அரை இறுதியில் நாம் யாருடன் மோதுகிறோம் என்பது மேட்டரே இல்லை. சுற்றுப் போட்டிகள் கடுமையானவை. இறுதிப் போட்டிக்குப் போக நமக்கு இன்னும் ஒரு வெற்றி தேவை.

இந்தியா - இங்கிலாந்து ஓகே

இந்தியா - இங்கிலாந்து ஓகே

எல்லோரும் இந்தியா, இங்கிலாந்து அணிகளை இறுதிப் போட்டியில் காண விரும்புகின்றன. இரு அணிகளும் சிறப்பாக விளையாடினால் இது சாத்தியமாகும்.

யார் வந்தாலும் சரிதான்

யார் வந்தாலும் சரிதான்

இறுதிப் போட்டியில் யார் வேண்டுமானாலும் மோதலாம். இறுதிப் போட்டியில் நாங்கள் இடம் பெற்றால் மகிழ்ச்சியே. நாங்கள் போகுமிடமெல்லாம் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு தருகிறார்கள். இது மகிழ்ச்சி தருகிறது என்றார் கோஹ்லி.

இந்திய தூதரகம் விருந்து

இந்திய தூதரகம் விருந்து

முன்னதாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்திய அணிக்கு விருந்தும், வரவேற்பும் அளிக்கப்பட்டது. அதில் ஒட்டுமொத்த இந்திய அணியினரும் கலந்து கொண்டனர். முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மான்டி பனீசர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்

Story first published: Wednesday, June 14, 2017, 8:11 [IST]
Other articles published on Jun 14, 2017
English summary
Done with the tough part of making it through the league phase, Indian captain Virat Kohli says opposition hardly matters in the Champions Trophy semi-final and final even though an India-England final is what everybody seems to want.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X