தம்பி பங்களாதேஷ்... நீ படிச்ச யுனிவர்சிட்டில இந்தியா வைஸ் சான்ஸலர்டா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாம்யியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டம், கிரிக்கெட் உலகில் இந்தியாவின் ஆளுமை என்னவென்பதை இன்னொரு முறை நிலைநாட்டி உள்ளது.

50 ஓவர்களில் பங்களாதேஷின் ஆட்டம் நேர்த்தியாகத்தான் இருந்தது. 50 ஓவர்கள் வரை நின்று நிலைத்து ஆடியது மட்டுமல்ல, கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் சரியாகப் பயன்படுத்தி ரன்களைக் குவித்தார்கள். 264 என்பது நல்ல ரன்கள்தான்.. அதுவும் இப்படி ஒரு முக்கிய மாட்சில்.

Champions Trophy 2017: What a flawless play Team India

இந்திய பவுலர்கள்தான் சரியாகப் பந்து வீசவில்லையோ என கடுப்பாகவும் இருந்தது. அதுவும் நம்பிக்கை நட்சத்திரம் அஸ்வின் ஏன் இப்படி பந்தை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கும்படி இருந்தது.

ஆனால் இந்தியாவின் பேட்டிங்...'நீ படிச்ச யுனிவர்சிட்டில நான் வைஸ் சான்ஸலர்டா' என்று சொல்லும் வகையில் அசத்தலாக இருந்தது.

குறிப்பாக ஷிகார் தவான், ரோஹித் ஷர்மா ஆட்டத்தைத் தொடங்கிய விதம் அத்தனை நேர்த்தி. ரோஹித் ஷர்மாவின் ஆட்டம்.. What a flawless play!

கேப்டன் கோஹ்லி... Very Coolly... இத்தனை நிதானமாக, பதட்டமில்லாமல் அவர் ஆடிப் பார்ப்பது இதுதான் முதல் முறை. A real Captain's knock!

A fantastic show.. Kudos to both the teams! 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பெற்றது அபார வெற்றி மட்டுமல்ல, எதிர் அணிகளை அச்சுறுத்தும் வெற்றியும் கூட!

சாம்பியன்ஸ் ட்ராபியில் யார் பைனலுக்கு வந்தாலும் அஸ்தியில் ஜுரம் காண வைக்கும் அசத்தல் ஆட்டம் இது. பாகிஸ்தான் உஷார்!

- Vinojasan

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Team India played a flawless game in Champions Trophy Semi finals against Bangladesh.
Please Wait while comments are loading...