அசத்தல் பௌலிங்.. அஸ்வின் இருந்திருந்தால் அப்போவே அரையிறுதி போயிருப்போம்ல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இன்று மோதின.

டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது நடப்பு சாம்பியனான இந்தியா. ஆனால் அதற்கடுத்த போட்டியில் இலங்கையிடம் அதிர்ச்சியளிக்கும் விதமாக வீழ்ந்தது இந்தியா. இதனால் அரையிறுதி வாய்ப்பு தள்ளிப்போனது.

சொதப்பல் பந்து வீச்சு

சொதப்பல் பந்து வீச்சு

முதலில் பேட் செய்து 300 ரன்களுக்கு அதிகமாக இருந்த போதும் இலங்கை அணி எளிதாக இலக்கை அடைந்தது. இதற்கு காரணம் இந்திய அணியின் சொதப்பல் பந்து வீச்சுதான்.

அஸ்வின் இல்லையே

அஸ்வின் இல்லையே

உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாமல் இந்த போட்டியை இந்தியா எதிர்கொண்டதுதான் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

கோஹ்லிக்கு மனதில்லை

கோஹ்லிக்கு மனதில்லை

அஸ்வினை களமிறக்க கோஹ்லிக்கு மனதில்லை என்றும் தகவல் வந்தது. இந்த நிலையில், வென்றேயாக வேண்டிய போட்டியில் இன்று, அஸ்வினை களமிறக்கினர். அவரது வருகை அணியில் எந்த மாதிரி மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதற்கு இன்றைய ரிசல்ட்டே சாட்சி.

இன்று அசத்தல்

இன்று அசத்தல்

அஸ்வின் 9 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் நல்ல ஃபார்மில் இருந்த ஆம்லாவை 35 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின். அந்த கேட்சை சிஎஸ்கே சக தோஸ்து டோணி பிடித்தார்.

ஸ்பின்னர்கள் சிறப்பு

ஸ்பின்னர்கள் சிறப்பு

ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஸ்பின்னர்களிடம் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிருபணமானது.

அரையிறுதி

அரையிறுதி

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் களமிறக்கப்பட்டிருந்தால் ஒருவேளை ஏற்கனவே இந்தியா வெற்றி பெற்று அரையிறுதி சென்றிருக்க நல்ல வாய்ப்பு இருந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ashwin has done a wonderfull job with ball against south Africa, he might get it against Srilanka atch easily.
Please Wait while comments are loading...