For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா-பாகிஸ்தான் பைனலையொட்டி ரூ.2000 கோடிக்கு சூதாட்டம்! கண்காணிப்பு வளையத்தில் வீரர்கள்

By Veera Kumar

லண்டன்: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பைனலையொட்டி ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவும்-பாகிஸ்தானும் ஐசிசி தொடர் ஒன்றின் பைனலில் 10 வருடங்களுக்கு பிறகு நாளை மோதுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இவ்விரு அணிகளும் நாளை பலப் பரிட்சை நடத்த உள்ளதை மொத்த கிரிக்கெட் உலக ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறார்கள்.

இதையடுத்து சூதாட்ட தரகர்களும் முழு வீச்சில் தங்கள் வியாபாரத்தை பெருக்கி வருகிறார்கள். இது தொடர்பான செய்தி இன்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு டிமாண்ட்

பாகிஸ்தானுக்கு டிமாண்ட்

பெட்டிங் தரகர்கள் இந்தியாதான் வெற்றி பெறும் என கருதுகிறார்கள். எனவே இந்தியா வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு ரூ.147தான் பரிசு தொகையாக கிடைக்குமாம். அதுவே, பாகிஸ்தான் வெற்றி பெறும் என பெட்டிங் கட்டுவோருக்கு 100 ரூபாய்க்கு, 300 ரூபாய் பரிசாக கொடுக்கப்படுமாம்.

சூதாட்ட தரகர்கள்

சூதாட்ட தரகர்கள்

எனவே பெரும்பாலானோர் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும் என பெட் கட்ட வாய்ப்புள்ளது. அவ்வாறு அதிகம் பேர் பெட் கட்டினால், இந்தியாவை வெற்றிபெறச் செய்ய சூதாட்ட தரகர்கள் கோல்மால்கள் செய்ய முயற்சிப்பர். இந்தியா மீது அதிகம் பேர் பெட் கட்டினால், பாகிஸ்தானை வெற்றிபெறச் செய்ய தங்கள் தந்திரங்களை பயன்படுத்துவர். அப்படி செய்வதுதான் தரகர்களுக்கு லாபம் என்பது காரணம்.

கண்காணிப்பு

கண்காணிப்பு

சுமார் ரூ.2000 கோடி அளவுக்கு சூதாட்டங்கள் நடைபெறும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். நாடு முழுக்க பெட்டிங்கை தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனனர்.

அமிர் சொகைல்

அமிர் சொகைல்

இந்தியா விளையாடும் போட்டிகள் மீது ஓராண்டுக்கு கட்டப்படும் சூதாட்டத் தொகை அளவு 2 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என ஒரு கணக்கீடு கூறுவது குறிப்பிடத்தக்கது. இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதினால்தான் ஐசிசி, பிசிசிஐ மட்டுமின்றி சூதாட்ட தரகர்களும் பணத்தை அள்ள முடியும். பாகிஸ்தான் எப்படியோ பைனலுக்குள் வர சூதாட்டம்தான் காரணம் என அந்த நாட்டு முன்னாள் வீரர் அமிர் சொகைல் நேற்று கூறியிருந்தார்.

Story first published: Saturday, June 17, 2017, 10:17 [IST]
Other articles published on Jun 17, 2017
English summary
India and Pakistan are set to face off in the ICC Champions Trophy 2017 final tomorrow (June 18) in London and Virat Kohli's men are favourites in the betting market.Holders India started their campaign in the 50-over global tournament with a win over Pakistan on June 4 and the two arch rivals will pull the curtains down on the event on Sunday in the title decider.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X