ஓ மை காட்.. கோஹ்லி "முட்டை"க்குக் காரணம்... இந்த பாகிஸ்தான் பெண் நிருபர்தானாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சூப்பர் ஸ்டார்களான ஏபி டி வில்லியர்ஸும், விராத் கோஹ்லியும் டக் அவுட் ஆனது ரசிகர்களை இன்னும் அதிர்ச்சியிலேயே வைத்துள்ளதாம். தற்போது இதற்கு காரணம் இவர்தான் என்று கூறி பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஜைனாப் அப்பாஸை நோக்கி கை காட்டுகின்றனர் ரசிகர்கள்.

ஜைனாப் அப்பாஸ் ஒரு பாகிஸ்தான் விளையாட்டு செய்தியாளர், விளையாட்டு செய்தி ஆய்வாளர், டிவி தொகுப்பாளர். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளைக் கவர் செய்வதற்காக இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளார். இந்த நிலையில்தான் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

இவரை போட்டிகளின்போது டிவில்லியர்ஸும், கோஹ்லியும் சந்தித்த பிறகுதான் "டக் அவுட்" ஆனார்களாம். எனவே இவர்கள் டக் அவுட் ஆக ஜைனாப்தான் காரணம் என ரசிகர்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டுள்ளனர்.

7ம் தேதி வில்லியர்ஸ் டக்

7ம் தேதி வில்லியர்ஸ் டக்

ஜூன் 7ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆனார். அவரது வாழ்க்கையில் இதுவரை அவர் ஒரு நாள் போட்டிகளில் முட்டை வாங்கியதே இல்லை. இதுதான் முதல் முட்டை என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

8ம் தேதி கோஹ்லி முட்டை

8ம் தேதி கோஹ்லி முட்டை

அடுத்த நாள் அதாவது 8ம் தேதி இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்தியா மோதியது. அதில் கோஹ்லி முட்டை போட்டார். ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றினார். இப்போட்டியில் இலங்கை வென்றது.

இவங்கதான் பாஸ் காரணம்!

இந்த நிலையில் இருவரும் இப்படி அடுத்தடுத்து முட்டை போட ஜைனாப்தான் காரணம் என கூறி ரசிகர்கள் கோபம் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

செல்பி எடுத்ததால்தானாம்

கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸை சந்தித்த ஜைனாப் அவர்களுடன் செல்பி எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். இவரை சந்தித்த ராசிதான் இரு ஜாம்பவான்களும் இப்படி சொதப்பி விட்டதாக புலம்புகின்றனர் ரசிகர்கள். சிலர் மேலும் ஒரு படி போய் சாபம் என்று கூறி அதிருப்தியைக் காட்டுகின்றனர்.

ஆஹா.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ!

ஆஹா.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ!

நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதப் போகின்றன. கோஹ்லியும், டிவில்லியர்ஸும் எப்படி ஆடப் போகிறார்கள் என்ற பதைபதைப்பு இருவரது ரசிகர்களிடம் நிரம்பியுள்ளது. என்ன சுவாரஸ்யம் என்றால் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சக வீரர்கள். இப்போது கேப்டன்களாக எதிரும் புதிருமாக களம் காண்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Superstar batsmen AB de Villiers and Virat Kohli collected ducks in the ongoing ICC Champions Trophy 2017 and cricket fans around the world are blaming one person for having "cursed" the duo.
Please Wait while comments are loading...