விஜயகாந்த்தும் விராட் கோஹ்லியும் ஒன்னு தெரியுமா.. நெட்டிசன்கள் கலாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: வங்கதேச பேட்ஸ்மேன் முஸ்பிகுர் ரஹிம் அவுட்டானபோது, இந்திய கேப்டன் கோஹ்லி செய்த நாக்கு சேஷ்டை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

வங்கதேசம் தனது பேட்டிங்கின் 3வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் ரன்னை குவித்தது. ஆனால் பிறகு வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்தன. தாக்குப்பிடித்த முஷ்பிகுர் ரஹிம், 61 ரன்கள் விளாசிய நிலையில், பார்ட்-டைம் பவுலர் ஜாதவ் பந்து வீச்சில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கேட்சை பிடித்த கோஹ்லி, நாக்கை வெளியே நீட்டியபடி தவளை போல துள்ளி, துள்ளி பவுலரிடம் வந்தார். ரஹிம் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக டிவிட் போட்டு சர்ச்சைக்குள்ளானார். அவரை கேலி செய்யும் வகையில் கோஹ்லி இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

கேப்டன்கள்

இந்த நாக்கு துறுத்தலை விஜயகாந்த்தின் நாக்கு துறுத்தலோடு ஒப்பிட்டு, கேப்டன் என்றாலே இப்படித்தானா என கலாய்க்கிறது இந்த மீம்.

பழிக்கு பழி

ஏற்கனவே ரஹிம் போட்ட டிவிட்டை மனதில் வைத்து கோஹ்லி பழி வாங்கிவிட்டதாக கூறுகிறது இந்த மீம்.

ஜென்டில்மேன் கேம்

ஆனால் இந்த நெட்டிசனோ, ஜென்டில்மேன் கேமான கிரிக்கெட்டில் கோஹ்லி இப்படி செய்திருக்க கூடாது என அட்வைஸ் செய்துள்ளார்.

அனுஷ்காவை பார்த்த ஆனந்தம்

கூட்டத்தில் காதலி அனுஷ்கா ஷர்மாவை பார்த்த ஆர்வத்தில் கோஹ்லி இப்படியெல்லாம் சேட்டை செய்துவிட்டார் என்பது இந்த நெட்டிசனின் கருத்து.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kohli stuck his tongue out and celebrated after taking a catch to dismiss Bangladesh batsman Mushfiqur Rahim (61) off Kedar Jadhav.
Please Wait while comments are loading...