கோஹ்லி டிப்ஸ் கேட்பதை விடுங்க.. பாகிஸ்தான் கேப்டனுக்கே டோணிதான் ஹீரோவாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்ப்ராஸ் அகமது, டோணியின் தீவிர ரசிகர் என்ற தகவலை அந்த நாட்டு எழுத்தாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் சிறந்த கேப்டன் டோணியா, கோஹ்லியா என அவர்களது ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் கோஹ்லியோ, டோணிதான் முக்கிய நேரங்களில் தனக்கு ஆலோசனை டிப்ஸ் அளிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன் கூட டோணியைத்தான் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆதர்ஷ நாயகன்

ஆதர்ஷ நாயகன்

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் எழுத்தாளர் அப்துல் மஜித் பாத்தி கூறியிருப்பதாவது: சர்ப்ராஸ் அகமது, டோணியை தனது ரோல் மாடலாக நினைக்கிறார். ஜூனியர் அளவிலான கிரிக்கெட்டில் சர்ப்ராஸ் அகமது பங்கேற்றபோதே டோணிதான் அவரின் நாயகன்.

ஹெலிகாப்டர் ஷாட்டுகள்

ஹெலிகாப்டர் ஷாட்டுகள்

சிறு வயது முதலே சர்ப்ராஸ் அகமதை எனக்கு தெரியும். டோணி போலவே பேட் செய்ய வேண்டும் என்பதற்காக, வலைப் பயிற்சியின்போது ஹெலிகாப்டர் ஷாட்டுகளை அடிக்க பயிற்சி எடுப்பது அவரது வழக்கம்.

இப்போதும் டோணிதான்

இப்போதும் டோணிதான்

பாகிஸ்தானின் கேப்டனாகியபிறகும், டோணியைத்தான் பின்பற்றி வருகிறார் சர்ப்ராஸ் அகமது. விளையாடும்போது டோணியை போலவே மிகவும் அமைதியாக ஆட்டத்தை கவனிப்பார் சர்ப்ராஸ் அகமது. அணிக்கு தேவை எனும்போது மட்டுமே ஆலோசனைகளை வழங்குவார். டோணியை போலவே இடுப்பில் கை வைத்தபடி நிற்பதற்கு சர்ப்ராஸ் அகமதுவிற்கு அலாதி பிரியம்.

வெற்றிக்கு வெறி

வெற்றிக்கு வெறி

சாம்பியன்ஸ் டிராபி லீக் ஆட்டத்தின்போது, இந்தியாவிடம் பாகிஸ்தான் மோசமாக தோற்றது. இந்த போட்டிக்கு பிறகு வீரர்களுடன் டிரெஸ்சிங் அறையில் இருந்தபோது, அடுத்த போட்டியை மட்டுமே சிந்தித்துக்கொள்ளுமாறு அட்வைஸ் கொடுத்துள்ளார் சர்ப்ராஸ் அகமது. தனது ஆதர்ஷ நாயகன் டோணி முன்னிலையில் தனது அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று சர்ப்ராஸ் அகமது தீவிரமாக உள்ளார். இவ்வாறு எழுத்தாளர் அப்துல் மஜ்ஜித் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sarfraz Ahmed, the captain of Pakistan in the ongoing Champions Trophy, has planned to pay tribute to one of his idols, Mahendra Singh Dhoni. While speaking on the issue, renowned Pakistani cricket writer Abdul Majid Bhatti disclosed saying, “Sarfraz has been idolising Dhoni since a long time when he started playing at the junior level.
Please Wait while comments are loading...