பாருங்கப்பா... இதை விட நல்ல சான்ஸ் கிடைக்காது.. உசுப்பேத்தும் இம்ரான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கராச்சி: பாகிஸ்தான் அணிக்கு இதை விட நல்ல தருணம் கிடைக்காது. இந்தியாவிடம் நாம் அடைந்த மிகப் பெரிய தோல்வியை சரி செய்ய இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் பெரிய வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்று முன்னாள் கேப்டன் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் இம்ரான் கான். தற்போது அரசியல்வாதியாகவும் அந்த நாட்டில் வலம் வருகிறார். இந்த நிலையில் நாளைய போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் நிச்சயம் வெல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் இம்ரான் கான்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் முதல் போட்டியில் இந்தியாவிடம் படு தோல்வி அடைந்ததற்கு நாளை கண்டிப்பாக பழி வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார் இம்ரான். அவரது பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

பொன்னான வாய்ப்பு

பொன்னான வாய்ப்பு

இது பாகிஸ்தானுக்குக் கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பாகும். இந்தியாவிடம் நாம் இழந்த பெருமையை மீட்டெடுக்க கிடைத்துள்ள வாய்ப்பு. முதல் போட்டியில் நாம் தோற்ற விதத்தை சரி செய்ய நாளை நாம் வென்றாக வேண்டும்.

மிக மோசமான தோல்வி

மிக மோசமான தோல்வி

இந்தியாவிடம் நாம் பெற்ற தோல்வி மிகவும் மோசமானது, அவமானகரமானது. இப்போது அதை சரி செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய பேட்டிங் சூப்பர்

இந்திய பேட்டிங் சூப்பர்

டாஸ் வென்றால் இந்தியாவை பேட் செய்ய பணிக்கக் கூடாது. காரணம் இந்தியாவிடம் அருமையான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. அவர்களை முதலில் பேட் செய்ய விட்டால் மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து விடுவார்கள்.

இந்தியாவிடம் கவனம் அதிகம்

இந்தியாவிடம் கவனம் அதிகம்

பிற அணிகளைப் போல இந்தியாவை எண்ணி விடக் கூடாது. இந்தியா வலுவான அணி. மிகப் வலுவான பேட்டிங்கைக் கொண்ட அணி. நமது பந்து வீச்சாளர்களுக்குத்தான் அதிக பிரஷர் உள்ளது. எனவே டாஸ் வென்றால் நாம் முதலில் பேட்டிங்கை எடுத்து விடுவதே நல்லது என்றார் இம்ரான்.

பாகிஸ்தானை விட பெட்டர்

பாகிஸ்தானை விட பெட்டர்

இம்ரான் மேலும் கூறுகையில் நீ்ண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவிட்ம் 3 அல்லது 4 நல்ல வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நல்ல ஸ்பின்னர்கள் உள்ளனர். மிகச் சிறந்த பேட்டிங் வரிசை உள்ளது. சுதாரிப்பான விக்கெட் கீப்பர் இருக்கிறார். உண்மையில் பாகிஸ்தானை விட வலுவான அணியாகவே இந்தியா திகழ்கிறது. அதேசமயம், வெற்றி களிப்பில் அவர்கள் அசட்டையாக இருப்பதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் இம்ரான் கான்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former World Cup winning captain, Imran Khan said Pakistan have got a golden opportunity in the Champions Trophy final to avenge its humiliating defeat to India in their first match of the tournament.
Please Wait while comments are loading...