இந்திய ரசிகர்களே.. இந்த வங்கதேசத்து தம்பி என்ன சொல்லுதுன்னு பாத்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிர்மிங்காம்: இந்திய வீரர்களுக்கு எதிராக தான் அதிக அளவில் "ஆப் -கட்" பந்துகளை வீசப் போவதாக வங்கதேச வேகப் பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் கூறியுள்ளார். தற்போதைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இது தனக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் கூட இந்தியாவுக்கு எதிராக ஒர்க் அவுட் ஆகும் என்று ரஹ்மான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் நடைபெறும் போட்டிகளின்போது அதிக அளவில் ஆப் கட் வீசுவார் ரஹ்மான். அது அவருக்கு பெரிய அளிவில் கை கொடுத்துள்ளது. ஆனால் இங்கிலாந்தில் அது அவருக்கு உதவவில்லை. ஆனால் இந்திய வீரர்கள் ஆப் கட்டுக்கு அலறுவார்கள் என்று தெம்பாக கூறுகிறார் ரஹ்மான்.

சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியை இந்தியாவை விட வங்கதேசம்தான் அதிகம் எதிர்பார்த்துள்ளது. நடப்புச் சாம்பியன் இந்தியா என்பதால், போட்டியில் வென்றால், நடப்புச் சாம்பியனை வீழந்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டபுள் சந்தோஷம் அதற்கு கிடைக்கும்.

ரஹ்மானின் நம்பிக்கை

ரஹ்மானின் நம்பிக்கை

இந்த நிலையில்தான் ஆப் கட்டுகளை வீசி இந்தியாவை நிலை குலைய வைக்கப் போவதாக மார் தட்டியுள்ளார் ரஹ்மான். இங்கிலாந்தில் அது தனக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் கூட இந்தியாவுக்கு எதிராக அதை பெரிய அளவில் பயன்படுத்தப் போவதாக அவர் கூறுகிறார்.

2 வருடத்திற்கு முன்பு

2 வருடத்திற்கு முன்பு

2 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆப் கட் மூலம்தான் இந்தியாவை நிலை குலைய வைத்தார் ரஹ்மான். அடுத்தடுத்து 2 போட்டிகளில் இந்தியாவின் பேட்டிங்கை தவிடு பொடியாக்கி அதிர வைத்தார். இரு போட்டிகளிலும் தலா 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார்.

இப்பவும் அதே பாச்சா பலிக்குமா

இப்பவும் அதே பாச்சா பலிக்குமா

இப்போது மீண்டும் அதே உத்தியைப் பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்த ரஹ்மான் திட்டமிட்டுள்ளார். ஆனால் நடக்குமா என்பதுதான் தெரியவில்லை. இருப்பினும் ரஹ்மான் நம்பிக்கை தெரிவிக்கிறார். இங்கிலாந்தில் இதுவரை எனக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவிடம் எனது வித்தை செல்லுபடியாகும் என்கிறார்.

வங்கதேசத்தில் பெரும் காத்திருப்பு

வங்கதேசத்தில் பெரும் காத்திருப்பு

இதற்கிடையே, வங்கதேச ரசிகர்கள் பெரும் ஆவலுடன் 15ம் தேதி நடைபெறப் போகும் அரை இறுதிப் போட்டிக்காக காத்துள்ளனர். வங்கதேசம் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வருகிறதாம். வங்கதேச அணி வலுவான நியூசிலாந்து அணியை சுற்றுப் போட்டியில் வீழ்த்தி அசத்தியது என்பது நினைவிருக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bangladesh pacer Mustafizur Rahman is hoping his off-cutters, which are not working in England as much they used to at home, come good against India in the ICC Champions Trophy semi-final here on Thursday (June 15).
Please Wait while comments are loading...