ஷிகர் தவான்.. போன முறை தொடர் நாயகன்.. இந்த தொடரில் "கோல்டன் பேட்" மட்டும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய அணியில் நிலைத்து நின்று ஆடி அதிக ரன் குவித்த ஷிகர் தவானுக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோல்டன் பேட் பெருமை கிடைத்தது. கடந்த 2013 தொடரில் இவர் தொடர் நாயகன் விருதை வென்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் பட்டம் வென்றது. இதையடுத்து பல்வேறு விருதுகளை ஐசிசி வழங்கியது.

தொடர் நாயகன் விருது பாகிஸ்தான் பவுலர் ஹசன் அலிக்குக் கிடைத்தது. அவருக்கு கோல்டன் பால் விருதும் கிடைத்து டபுள் சந்தோஷத்தை பாகிஸ்தானுக்கு அளித்தது.

13 விக்கெட் வீழ்த்திய ஹசன் அலி

13 விக்கெட் வீழ்த்திய ஹசன் அலி

இந்தத் தொடரில் ஹசன் அலி மொத்தம் 13 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து அவர் விக்கெட்களை எடுத்து வந்தார்.

1-3-3-3-3

1-3-3-3-3

இந்தியாவுடன் நடந்த முதல் போட்டியில் ஹசன் அலி 10 ஓவர்களில் 70 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். இதையடுத்து ஆவேசமடைந்த அவர், அதற்கு அடுத்து நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் சாய்த்தார். இலங்கைக்கு எதிரான போட்டியிலும் 3 விக்கெட் சாய்த்த ஹசன் அலி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் அதே ஆவேசத்துடன் 3 விக்கெட் வீழ்த்தினார். நேற்று நடந்த இறுதிப் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட் எடுத்தார்.

கோல்டன் பேட் தவான்

கோல்டன் பேட் தவான்

ஷிகர் தவானுக்கு கோல்டன் பேட் விருது கிடைத்தது. இவர்தான் இந்தத் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரர். பாகிஸ்தானுக்கு எதிராக 68, இலங்கைக்கு எதிராக 125, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 78, வங்கதேசத்திற்கு எதிராக 46, பாகிஸ்தானுக்கு எதிராக 21 என மொத்தம் 338 ரன்கள் எடுத்தார் தவான்.

கடந்த முறை மேன் ஆப் தி சீரிஸ்

கடந்த முறை மேன் ஆப் தி சீரிஸ்

கடந்த 2013ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தவான் மேன் ஆப் தி சீரிஸ் விருதை வாங்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த முறை அது இறுதிப் போட்டியில் தோற்றதால் நழுவிப் போய் விட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fast bowler Hasan Ali was named player of the ICC Champions Trophy 2017 after he bowled Pakistan to their maiden ICC Champions Trophy title at The Oval.
Please Wait while comments are loading...