வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு.. தெறிக்கவிடும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ்ணிக்கு விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அருமையான ஆட்டத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கட்டிப்போடப்பட்டனர்.

Chennai Super Kings, Rajasthan Royals back in Indian Premier League: Its Official

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் ஆனது. இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐபிஎல் 2வது இடம், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று ஆதிக்கம் செய்து அசத்திய அணி சிஎஸ்கே. பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியும் இதுதான்.

ஆனால், கடந்த 2015ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சூதாட்டப் புகார் எழுந்தது. எனவே, அந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன. அந்த தடை நேற்றுடன் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு சென்னை அணி மீண்டும் ஐபிஎல்லில் களமிறங்கவுள்ளது. அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வந்துட்டோம்னு சொல்லு, திரும்பி வந்துட்டோம்னு சொல்லு விசில் போடு என பதிவேற்றம் செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளதால் ரசிகர்களை உற்சாகத்திலுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Board of Control for Cricket in India (BCCI) on Friday welcomed the Indian Premier League franchises – Chennai Super Kings and Rajasthan Royals – back into the League.
Please Wait while comments are loading...