For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

801வது சிக்ஸ் அடித்து மொய் வைத்த கிறிஸ் கெயில்.. இப்படி ஒரு பேட்டிங்கை பார்த்து இருக்கீங்களா?

கிரிக்கெட் உலகில் மொத்தம் 801 சிக்ஸர்கள் அடித்து கிறிஸ் கெயில் சாதனை படைத்து இருக்கிறார்.

By Shyamsundar

டாக்கா: வங்கதேசத்தில் தற்போது பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டி நடந்து கொண்டு இருக்கிறது. இதில் கிறிஸ் கெயில் நேற்று நடந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வைரல் ஆகியுள்ளார்.

இந்த ஒரே போட்டியில் மட்டும் இவர் 18 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். அதேபோல் இந்த போட்டியில் நிறைய சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் இவர் பல டி-20 சாதனைகளை முறியடித்து இருக்கிறார்.

நேற்று இவர் ஆடிய ருத்ர தாண்டவத்தை பார்த்து மொத்த கிரிக்கெட் உலகமே மிரண்டு போய் இருக்கிறது. டிவிட்டர் உலகம் இவரை வாழ்த்து மழையால் நனைத்து வருகிறது.

சாதனை படைத்த கிறிஸ் கெயில்

நேற்று நடந்த பங்களாதேஷ் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் 'ரங்பூர் ரைடர்ஸ்' அணியும் 'டாக்கா டைட்டன்ஸ்' அணியும் மோதியது. மிகவும் திரில்லாக சென்ற இந்த போட்டியில் ரங்பூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 18 சிக்ஸர்கள் அடித்தார். 69 பந்துகள் பிடித்த இவர் 146 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் இவர் 3 சிக்ஸர்கள் அடித்தார்.

ரன்கள்

ரன்கள்

இந்த போட்டியின் மூலம் கெயில் 11,000 ரன்களை கடந்தார். டி-20 போட்டிகளில் 11,000 ஆயிரம் ரன்கள் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே. அதேபோல் இந்த போட்டியில் இவர் அடித்த 18 சிக்ஸர்கள்தான் டி-20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸ்கள். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கெயில் அடித்த 17 சிக்ஸ்கள்தான் இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அதை அவரே முறியடித்துள்ளார்.

20 வது சதம்

இந்த போட்டியின் மூலம் இவர் 20வது சதம் அடித்து இருக்கிறார். இதுவரை டி-20 போட்டிகளில் இருபது சதம் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே. பல வீரர்கள் ஒருநாள் போட்டியிலேயே சதம் அடிக்க திணறிக்கொண்டு இருக்கும் போது கெயில் டி-20 போட்டியிலேயே அசால்ட்டாக இரட்டை சதம் அடிப்பதாக இவர் பாராட்டி இருக்கிறார் .

அடுத்து என்ன சாதனை

இவர் இதுவரை 4 முறை 11 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 3 முறை 12 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதன்பின் வரிசையாக 13, 14, 15, 17 என எல்லா வகையிலும் சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். இதுவரை இந்த சாதனையை எந்த வீரரும் செய்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 13, 2017, 16:49 [IST]
Other articles published on Dec 13, 2017
English summary
Chris Gayle hits his 801 six and creates new record. He hit 18 in single match against Dhaka Dyanmites in BPL which made him to create a new record.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X