இம்ரான் கான் சொன்னா மாதிரியே செஞ்சுட்டாங்கய்யா நம்ம பய புள்ளைக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் எடுக்காமல் எதற்கு ஃபீல்டிங்கை தேர்வு செய்தது என கிரிக்கெட் விமர்சகர்கள் விளாச தொடங்கிவிட்டனர். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் சொன்னது போலவே அவர்களுக்கு லட்டு போல் பேட்டிங்கை தூக்கி கொடுத்துள்ளனர்.

உலகமே உற்று நோக்கி வரும் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன. பரம எதிரியான பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்யில்லை என பிசிசிஐ அறிவித்தது.

ஆனாலும் மினி உலகக்கோப்பை எனக்கூறப்படும் சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மோத வைத்தது விதி. லண்டன் ஓவல் மைதனாத்தில் நடைபெற்று வரும் போட்டியை உலகம் முழுவதும் தொலைக்காட்சி வாயிலாக ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

இம்ரான்கான் சொன்ன மாதிரி..

இம்ரான்கான் சொன்ன மாதிரி..

முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் இந்தியாவை வீழ்த்த இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது. எனவே முதல் பேட்டிங் தேர்வு செய்து இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுங்கள் என கூறியிருந்தார்.

டாஸ் வென்ற இந்திய அணி

டாஸ் வென்ற இந்திய அணி

ஆனால் இந்திய அணி தான் டாஸ் வென்றது. இதனால் பேட்டிங்கா ஃபீல்டிங்கா என முடிவு செய்யும் உரிமையும் இந்திய அணிக்கே வழங்கப்பட்டது.

தூக்கி கொடுத்தாங்களே..

தூக்கி கொடுத்தாங்களே..

ஆனால் லட்டை போல் பேட்டிங்கை அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே தூக்கி கொடுத்தது இந்தியணி. இந்திய பந்து வீச்சு பெரிதாக சோபிக்கவில்லை.

எந்த தைரியத்தில் ஃபீல்டிங்

எந்த தைரியத்தில் ஃபீல்டிங்

எந்த தைரியத்தில் இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து பாகிஸ்தானை பேட்டிங் செய்ய பணித்தது என விமர்சகர்கள் விளாசத் தொடங்கி விட்டனர். ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
India won the toss and chosen fielding. Cricket critics have begun to blame the Indian Team for chose fielding.
Please Wait while comments are loading...