டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் ஒன்றும் படுக்கையறை ரகசியங்கள் அல்ல.. கோஹ்லியை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கும்ப்ளேவை வரவேற்று போட்ட டிவீட்டை நேற்று டெலிட் செய்தார் கோஹ்லி. ஏற்கனவே பாகிஸ்தானிடம் தோற்றுப் போன வெறியில் உள்ள ரசிகர்களால் அணிக்குள் நடக்கும் சண்டையை சகித்து கொள்ள முடியவில்லை.

கோஹ்லியுடனான மோதலால் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே ராஜினாமா செய்த பிறகும் கூட அவருக்காக போட்ட டிவீட்டை கோஹ்லி நீக்கியிருப்பதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோஹ்லி கிரிக்கெட் விளையாட வேண்டுமே தவிர அரசியல் செய்யக்கூடாது என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கோஹ்லி மீது அதிருப்தி தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

படுக்கையறை ரகசியங்கள் அல்ல

கோஹ்லி டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் ஒன்றும் படுக்கையறை ரகசியங்கள் அல்ல. அனில்கும்ப்ளே உண்மையான விளையாட்டு ஸ்பிரிட்டை காட்டினார், நீங்கள் பணம் சம்பாதிப்பதில் தான் குறியாக உள்ளீர்கள்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

அரசியல் செய்யக்கூடாது

விராத் கோஹ்லி கிரிக்கெட் தான் விளையாட வேண்டும் அரசியல் செய்யக்கூடாது என்கிறார் இந்த நெட்டிசன்..

தரம் தாழ்ந்தா இருப்பார்?

நேஷனல் கிரிக்கெட் அணியின் தலைவர் இவ்வளவு தரம் தாழ்ந்தா இருப்பார்? நிச்சயமாக பக்குவமே இல்லை.. என்கிறார் இந்த வலைஞர்..

துயரமான காலம்..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு துயரமான காலம்..! என்கிறார் இந்த நெட்டிசன்..

கீழே கொண்டு சென்றுவிடும்

வரும் நாட்களில் வெற்றி பெற்றாலும் கோஹ்லியின் அணுகுமுறையும் கர்வமும் இந்திய அணியின் மேலாண்மையை கீழே கொண்டு சென்றுவிடும் என்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cricket fans displeasure on Virat kohli's attitude. Fans feels bad for the conflicts among the Indian Team.
Please Wait while comments are loading...