இப்படியும் ஒரு கணக்கு... கோப்பையை இந்தியா பறிகொடுத்ததற்கு காரணமே வங்கதேச ராசி தானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வியை சந்தித்ததற்கு காரணமே வங்கதேச ராசிதான் என்கிறது ஒரு கோஷ்டி.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டிகளில் நன்றாக விளையாடி வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் பரமவைரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்றும் பேட்டிங்கை தேர்வு செய்யாதது தொடங்கி ஏகப்பட்ட அக்கப்போர்களுடன் ஆடியது இந்திய அணி.

பொறுப்பற்ற சுயநலம்

பொறுப்பற்ற சுயநலம்

இந்திய வீரர்களின் பொறுப்பற்ற தனத்தாலும் சுயநலத்தாலும் பாகிஸ்தானிடம் கடைசியில் சரணைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

கண்டனங்கள்

கண்டனங்கள்

பல நகரங்களில் கோபத்தால் டிவிக்களை ரசிகர்கள் உடைத்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வங்கதேச ராசியாம்

வங்கதேச ராசியாம்

இந்நிலையில் நம்ம வீரர்களை குறைசொல்லி பிரயோஜனமில்லை... எல்லாவற்றுக்குமே வங்கதேசத்தின் ராசிதான் காரணம் என ஒரு குரூப் கிளம்பியுள்ளது. பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் வங்கதேசத்தை இந்திய அணி வீழ்த்திவிட்டால் அதற்கு அடுத்த போட்டியில் இந்தியா தோற்பது வாடிக்கையாம்.

மருந்து தேடும் ரசிகர்கள்

மருந்து தேடும் ரசிகர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இப்படி 8 முறை நடந்துள்ளதாம். இருப்பினும் வங்கதேசத்தை வீழ்த்திய போட்டியில் 5 முறை இந்தியா வென்றும் இருக்கிறதாம். இப்படி ஒரு கணக்குப் போட்டு வங்கதேச ராசிதான் நம்ம தோல்விக்கு காரணம் என மருந்து போட்டு வருகிறது ரசிகர்கள் கோஷ்டி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cricket fans found the unique reason for the India's loss in ICC Championship.
Please Wait while comments are loading...